Load Image
Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: வேட்புமனு கேட்டு வந்தவருக்கு அடி உதை

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: வேட்புமனு கேட்டு வந்தவருக்கு அடி உதை
ADVERTISEMENT




சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்க வந்தவருக்கு நிர்வாகிகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மீடியாவிற்கு பேட்டி அளிக்க வந்த போது, அங்கிருந்த தொண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முன்மொழியவும், வழிமொழியவும் ஆட்கள் இல்லாததால் வேட்புமனு வழங்கவில்லை என அதிமுக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம்(டிச.,1) நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை கட்சி தலைமை அறிவித்து உள்ளது. கட்சி அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று(டிச.,3) துவங்கியது.

இந்நிலையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(டிச.,3) காலை துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரியை சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். ஆனால், அவருக்கு வேட்புமனு கொடுக்கப்படவில்லை.


இதனையடுத்து வெளியே வந்த பிரசாத் சிங், மீடியாவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அங்கிருந்த அதிமுக.,வினர் அவரை அடித்து விரட்டினர். இதனால் , அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Latest Tamil News
இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் அளித்த விளக்கத்தில்,விதிகளை பின்பற்றாமல், வழிமொழியவும், முன்மொழியவும் ஆட்கள் இல்லாததால், பிரசாத் சிங்கிற்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.


இதனிடையே, பன்னீர்செல்வம், பழனிசாமி தூண்டுதல் காரணமாக என்னை தாக்கினர் எனவும், விருப்ப மனு பெற தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாரிடம் பிரசாத் சிங் புகார் மனு அளித்துள்ளார்.


வாசகர் கருத்து (17)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    அதிமுக கட்சி கௌண்டர் முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது. இது தெரியாமல் பாவம் இவர் வேட்புமனு போட வந்து உதைவாங்கி உள்ளார். இன்று தமிழகத்தில் திமுக மற்றும் பிஜேபி மட்டும் அணைத்து சாதி கட்சியாக உள்ளது. மற்ற அணைத்து கட்சிகளும் சாதி கட்சிகள் தான்.

  • ?????????? - thanks ,அருபா

    மாற்றுக் கட்சிக்காரனோ?

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    டீம்கா வில் தலைமை பதவிக்கு மனு போடணும் னு நினைச்சாலே அவ்ளோதான்...சனநாயகம் அவ்ளோ இருக்கு... தாக்கி , வைகோ , சைதை துரைசாமி, முன்னாள் முதல்வர் ஜெ உட்பட..டீம்க வின் சனநாயகத்தை அதனுடைய செயல் விளக்கத்தை சட்டசபையிலும் அரசியல் மேடையிலும் ஊருக்கே நிரூபிச்சாச்சு...இந்த சின்ன தம்பிகளுக்கு, நேற்றைய விஷயம் தான் தெரியும் போல...போன வருஷம் அதுக்கு முன்னால உள்ள விஷயம் எல்லாம் தெரியாத புள்ளைங்க.. கால்ட்வெல் வரலாறு படிச்ச சமசீர் பிள்ளைகள்....

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    ஒரே நாமினேஷன் ஒரே ஒட்டு ஒரே முடிவு இதுவல்லவோ ஒரே ஜனநாயக தேர்தல் உலகிலேயே இந்தியாதானே மிகப்பெரும் ஜனநாயக நாடு சும்மா பக்கத்துல போனாலே எல்லாம் மாறிடுதே

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆஹா, உட்கட்சி ஜன நாயகம் என்பதன் உருவமே இதுதான் பின் எதற்கு வேட்புமனு வாங்கும் நாடகம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement