Load Image
Advertisement

சுகாதார உள்கட்டமைப்பை வலிமைப்படுத்திய மோடி அரசு: மத்திய சுகாதார அமைச்சர்

 சுகாதார உள்கட்டமைப்பை வலிமைப்படுத்திய மோடி அரசு: மத்திய சுகாதார அமைச்சர்
ADVERTISEMENT

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பலவீனமாக இருந்த சுகாதார உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: 3.46 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4.6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த பாதிப்புகளில் 1.36 சதவீதம் ஆகும். இந்தியாவில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 25 ஆயிரம் பாதிப்புகள், 340 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது உலகளவில் மிக குறைவான பதிவாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பலவீனமாக இருந்த சுகாதார உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகின்றது. சுகாதார உள்கட்டமைப்பை புறக்கணித்த முந்தைய அரசை குறைக் கூறாமல் இதனை செய்துள்ளது.

Latest Tamil News
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு 2020ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி கேரளாவில் பதிவானது. ஆனால், அதற்கு முன்னதாக 8ம் தேதியே மத்திய அரசு அமைத்த கண்காணிப்பு குழு ஆலோசனை செய்துள்ளது. அதாவது, பாதிப்பு வருவதற்கு முன்னதாகவே மத்திய அரசு குழு அமைத்து எச்சரிக்கையாக இருந்துள்ளது. தடுப்பூசி குறித்து யாராவது ஆராய்ச்சி செய்தால் ஒப்புதல் பெற 3 ஆண்டுகள் ஆகும். எனவே, யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. நாங்கள் அந்த விதிகளை ரத்து செய்ததால், ஓராண்டிற்குள் ஆராய்ச்சி செய்து தேசத்திற்கு கோவிட் தடுப்பூசி கிடைத்துள்ளது.


இந்தியாவில் தற்போது வரை 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. 18 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (10)

  • ஆரூர் ரங் -

    வல்லரசு நாடுகளில கூட இப்போதும் கூட கோவிடால் இறப்புகள் மிகவும் 😓அதிகரித்து ஊரடங்கு மீண்டும் அமலாக்கியுள்ளது . இங்கு மத்திய அரசின் திறமையால் நிலைமை கட்டுக்குள் வந்து ஊரடங்கு இல்லை. வேறெந்த நாட்டிலும் இங்கு போல தரமான சொந்த 125 கோடி தடுப்பூசி இலவசமாக போடப்படவில்லை . சீனாவிலேயே மீண்டும் ஊரடங்கு🤭 அமல் . நம்நாட்டில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. ஜி எஸ் டி வசூல் உயர்வே இதற்கு சாட்சி . நேரடி வரி வசூலும் 50 சதவீதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. நல்லவேளையாக எதிலும் உறுதியான உடனடி முடிவு எடுக்க முடியாமல் நாட்டை லட்சம் கோடி ஊழல்களால் சீரழித்த சோனியா அரசு இந்த கொரோனா காலத்தில் ஆளவில்லை . இல்லையெனில் நாடு எப்போதோ😡 சுடுகாடாகியிருக்கும் .

  • radha - tuticorin,இந்தியா

    அருமை அருமை ஆஸ்பத்திரியில இடம் இல்லாம கங்கை நதி கரையில எவ்வளவு பிணங்களை எரிச்சி சுகாதார உள்கட்டமைப்பை சூப்பரா வலிமைப்படுத்தி இருந்தார்களே.

  • selva - Chennai,இந்தியா

    எல்லாம் சாங்கி சொன்னால் .. மிக சரியாதான் இருக்கும்..

  • Visu Iyer - chennai,இந்தியா

    அடுத்து வர இருக்கும் உப்பிசலான், சிக்மா, ஒமேகா போன்ற வைரஸ்களுக்கு தயாராகி விட்டோமா...?

  • Visu Iyer - chennai,இந்தியா

    அடுத்த ஜிஎஸ்டி வரியுடன் கூடிய கட்டண தடுப்பூசி வர போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அதுவும் ஆண்டுக்கு இரண்டு முறை என்று சொல்லுவாங்களோன்னு தான் யோசனையா இருக்கு...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement