dinamalar telegram
Advertisement

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Share
சென்னை: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெப்பச்சலனம் காரணமாக இன்று(டிச.,03) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தென் தமிழக பகுதிகளில் நிலவும் விளமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை(டிச.,04) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணிநேரத்தில் தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 8 செ.மீ., திருநெல்வலி மாவட்டம் சேரன்மகாதேவி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை



மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நாளை(டிச.,4) காலை நெருங்கக்கூடும். அதனை தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.இதன் காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 90 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
டிச.,04மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 100 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement