dinamalar telegram
Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Share
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சமீபத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தலை நேற்று (டிச.,2) கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிச.,7ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது.
இந்நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,'ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சி நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்திற்கு எதிராக விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.சி.பழனிசாமியின் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, இன்று மதியம் நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது, 'கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழனிசாமிக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன்,' எனக்கூறி, தேர்தலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பதிலளிக்குமாறும் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    கட்சியில் அங்கத்துவம் இல்லாதவருக்கு என்ன உரிமை இருக்கின்றது. அதிமுகவுக்கு எதிராகச் சதிசெய்பவர்களில் இவரும் ஒருவர்.

  • சீனி - Bangalore,இந்தியா

    சசிகலா தலைமையில் அதிமுக விளங்காமல் போய்விடும்.

  • அப்புசாமி -

    இப்பத்தான் போட்டி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவருக்கு அடி, உதையுடன் செம கெவனிப்பு நடந்ததா செய்தி வந்தது. நீதிபதிகளும் இந்த செய்தியைப் படிச்சுட்டு நியாயமா(?) தீர்ப்பு வழங்கிட்டாங்க போலிருக்கு. நமக்கேன் வம்புன்னு.

  • சீனி - Bangalore,இந்தியா

    சின்னம்மா, கட்டடத்தை இடிக்க என்னென்ன கம்பிகட்டுற திட்டம் எல்லாம் போடுது....ஹாஹாஹா....

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    மாஸ் தலைவர் இல்லை என்றால் இந்த குழப்பம் வரத்தான் செய்யும்.

Advertisement