ADVERTISEMENT
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 221 ரன்கள் சேர்த்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. 2வது டெஸ்ட் மும்பையில் இன்று (டிச.,03) துவங்கியது. முதல் டெஸ்டில் ஓய்வில் இருந்த கேப்டன் கோஹ்லி, மீண்டும் அணியில் இணைந்தார். இப்போட்டியில் இஷாந்த் சர்மா, ரகானே, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது.
மோசமான வானிலை காரணமாக தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜெயந்த் யாதவ், சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மயங்க் அகர்வால், சுப்மன் கில் முதல் இன்னிங்சை துவக்கினர்.
இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 44 ரன்னில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய புஜாரா, கேப்டன் கோஹ்லி அடுத்தடுத்து 'டக்' அவுட்டாக 80 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தன் பங்கிற்கு 18 ரன்கள் சேர்த்து கேட்சானார்.
பொறுப்புடன் விளையாடிய மயங்க் அகர்வால் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் 120 ரன்னுடனும், விருத்திமான் சஹா 25 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்., வீழ்த்தினார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. 2வது டெஸ்ட் மும்பையில் இன்று (டிச.,03) துவங்கியது. முதல் டெஸ்டில் ஓய்வில் இருந்த கேப்டன் கோஹ்லி, மீண்டும் அணியில் இணைந்தார். இப்போட்டியில் இஷாந்த் சர்மா, ரகானே, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது.

இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 44 ரன்னில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய புஜாரா, கேப்டன் கோஹ்லி அடுத்தடுத்து 'டக்' அவுட்டாக 80 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தன் பங்கிற்கு 18 ரன்கள் சேர்த்து கேட்சானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!