ADVERTISEMENT
உலகமெங்கும் கொரோனா சற்று ஓய்ந்திருந்த நிலையில், தென்ஆப்பிரிக்காவின் காட்டங்க் மாகாணத்தில் ஜோனஸ்பெர்க்-ல் முற்றிலும் மாறுபட்ட வகையில் தனித்துவமான, உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இதுவரை 29 நாடுகளில் பரவி விட்டது.
உலக சுகாதார அமைப்பால் ஒமைக்ரான் வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பற்றிய சில சந்தேகங்களும் விளக்கங்களும்...
* இது டெல்டா வகை கொரோனா வைரஸை விட வேகமாக பரவுமா. காட்டங்க் மாகாணத்தில் டெல்டா வைரஸை விட வேகமாக பரவி நம்பர் ஒன் இடத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரஸ் போலவே இதன் தாக்கம் பல மாதங்களுக்கு முன்பே பரவ தொடங்கி உள்ளது.

* ஒமைக்ரான் மற்றொரு அலையாஇதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பினும், இறப்புகள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
* அதிக உயிரிழப்பு ஏற்படுமா
இதுவரை பதிவாகியுள்ள தகவலின்படி நோய்தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. காட்டங்க் மாகாணத்தில் ஒமைக்ரான் வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், இறப்பவரின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவே உயர்ந்து உள்ளது. இந்த வைரஸின் வீரியம் மாறும் தன்மை 3 முதல் 4 வாரங்கள் மேலாகியும்,
மருத்துவமனையில் சேர்வது குறைவாக உள்ளது.
* குழந்தைகளை பாதிக்குமாஇதுவரை குழந்தைகளிடம் இருந்து கண்டறியப்படவில்லை.
* அறிகுறிகள் என்ன
தீவிர சோர்வு, தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் என அதிகளவிலும் ஒருசிலருக்கு அதிகளவில் காய்ச்சல் தென்பட்டுள்ளது.
* தடுப்பூசிகள் தடுக்குமாதென்னாப்பிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் இத்தொற்று பரவுகிறது. எனினும் தடுப்பூசிகள் அனைத்து மாறுபட்ட தீவிர கொரோனா தொற்று நோயிலிருந்தும்,
இறப்பிலிருந்தும் பாதுகாக்கிறது. நாம் கொரோனா முதல், இரண்டாம் அலையில் கடைபிடித்தது போல, விமான போக்குவரத்து மூலம் வெளிநாட்டவர் வருகையை கண்காணிப்பது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவது நல்லது.
ஒமைக்ரான் சிகிச்சை முறையில் தற்போது கடைபிடிக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகளே தொடரும் நிலை உள்ளது.
* பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா
தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அது திருப்புமுனை தொற்று எனப்படும். பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொள்வதால் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இது நோய்க்கு எதிராகவும், பரவும் தன்மைக்கு எதிராகவும் பாதுகாப்பாக இருக்கும்.
முதல் நிலை, இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தியவர்கள், அடுத்த நிலை பூஸ்டர் தடுப்பூசி அமலுக்கு வந்தால் அதனை செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது.- டாக்டர் மா.பழனியப்பன்நுரையீரல் சிறப்பு நிபுணர் மதுரை 94425 24147
இது எப்படி இருக்கு என்றால், ADMK ஆட்சி ஓய்ந்தவுடன் DMK ஆட்சி வருவதுபோல. ஒட்டு மொத்த உலகத்தையே கடந்த இரண்டு வருடங்களாக இந்த வைரஸ், பெயர் மாறி, உரு மாறி, மக்களின் உயிரை எடுக்கிறது. அதேபோல், கடந்த பல வருடங்களாக இந்த இரண்டு கழகங்களும் தமிழக மக்களின் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது.