dinamalar telegram
Advertisement

காயமடைந்த காலுக்கு பதிலாக நல்ல காலை அகற்றிய டாக்டர்

Share
வியன்னா:ஆஸ்திரியா நாட்டு தலைநகர் வியன்னாவில் முதியவரின் நன்றாக இருந்த காலை, கவனக்குறைவாக 'ஆப்பரேஷன்' வாயிலாக வெட்டி எடுத்த டாக்டருக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரீஸ்டாட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனை யில், சமீபத்தில் 82 வயது முதியவர் சிகிச்சைக்கு சேர்ந்தார். விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்கு ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
ஆப்பரேஷன் செய்த டாக்டர், அகற்ற வேண்டிய காலுக்கு பதிலாக, நன்றாக இருந்த மற்றொரு காலை கவனக்குறைவால் வெட்டி அகற்றி விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னரே, டாக்டருக்கு தவறு புரிந்தது. அடுத்த சில நாட்களில் அந்த முதியவர் இறந்து விட்டார்.
அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உடனடி நிவாரணமாக, 4.24 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான டாக்டர், 'இது மனித தவறு' என, வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, முதியவரின் மனைவிக்கு மேலும் 2.59 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement