dinamalar telegram
Advertisement

வேலூரில் ரூ 50 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை கைது

Share
வேலுார்: வேலுாரில், 50 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுார் கொணவட்டத்தை சேரந்தவர் மகேஸ்வரி, 55. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கணவர் தர்மலிங்கம், 60. ஒய்வு பெற்ற எஸ்.ஐ., இருவரும் சேர்ந்து 2018 ம் ஆண்டு வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கினர். இதில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறினர்.
இதை நம்பி ஆசிரியைகள் ராணிப்பேட்டையை சேர்ந்த ஜான்சிராணி 2.50 கோடி, வேலுாரில், மலர் 45 லட்சம் ரூபாய், தமிழ் செல்வி, 2. 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இதே போல தமிழகம் முழுவதுமிருந்து ஆசிரியர்கள், பொது மக்கள் பணத்தை இவரிடம் முதலீடு செய்தனர்.பல மாதங்கள் ஆகியும் வட்டி தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரி, தர்மலிங்கம் தம்பதியினர் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும், அந்த பணத்தில் அவர்களது மகள்களான கீர்த்தனா, பூபானா ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியதும் தெரியவந்தது.இதையடுத்து மகேஸ்வரி, தர்மலிங்கம் ஆகியோர் மீது வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையறிந்த அவர்கள் தலைமறைவாயினர். இவர்களை கண்டுபிடித்து கைது செய்து பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வேலுாரில் பதுங்கியிருந்த மகேஸ்வரியை போலீசார் இன்று கைது செய்து மகளிர்சிறையில் அடைத்தனர். தலைமறைவான அவரது கணவர் தர்மலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (61)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  இந்த திமுக அரசாட்சியில் சிறார் கற்பழிப்பு , தற்கொலை , கொலை , கஞ்சா கடத்தல் ,அரசாங்க அதிகாரிகள் கோடி கணக்கில் பண மோசடி செய்வது கல்வி தந்தைகள் , கல்வி தாய்கள் முதற்கொண்டு பொது மக்களிடம் கோடி கணக்கான ரூபாய்கள் வாங்கி அவர்களை ஏமாற்றி தலை மறைவு ஆகிறார்கள் இதை போன்ற விஷயங்கள் சமீப காலத்தில் ஆகாயத்தை தொட்டு விட்டன கீழ் மட்ட பேர்வழிகளில் இருந்து . அதிகாரிகள் , அரசியல் வியாதிகள் , அமைச்சர்கள் வரை அநியாயங்கள்கொடி கட்டி பறக்கின்றன இந்து ஆலயங்கள் ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இடித்து தள்ளப்படுகின்றன இவை எப்போது முடியும் ? நீதி மன்றங்களும் தானாகவே வந்து சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் . இனி கடவுள் தானாகவே வந்து தந்தன்னை அளித்தால் தான் உண்டு

 • Dinesh Pandian - Hyderabad,இந்தியா

  அமலாக்க துறைக்கு விஷயம் போயிருக்கும் . அவங்க ஏதாவது செஞ்சாதான் இதுக்கு முடிவு

 • NARAYANAN.V - coimbatore,இந்தியா

  மற்றொரு குற்றவாளி முன்னாள் எஸ்.ஐ.என்பதால் காவல்துறை அவரைக் கைது செய்யாமல் கரிசனம் காட்டிக்கொண்டு இருப்பது நன்கு தெரிகிறது.அந்தக் குற்றவாளி குற்றம் பதியப்பட்ட காவல்நிலையத்திற்குத் தினமும் வந்து கேசின் போக்கைத் தெரிந்து கொண்டு,தப்பித்துக்கொள்ள. காய்களை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்று காவல் நிலையத்திலேயே உக்கார்ந்து கொண்டு திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார். குற்றம் சாட்டியவர்களோடு சமாதானமாகப் போகும் பாணியில் அவர்களையெல்லாம் மிரட்டி வழக்குகளையெல்லாம் வாபஸ் வாங்கச் சொல்லுவார் .இதை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும். இதுதான் திரை மறைவில் நடக்கும். இதுதானே யூசுவல் பார்முலா. தமிழ்நாட்டிலே இந்த மாதிரி கேசுகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஊத்தி மூடப்பட்டு இருப்பது மாமாங்கப்பழசு கதை. எவ்வளவு தூரம் நியாயம் ஜெயிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குற்றம் சாட்டியவர்கள் எந்த மிரட்டலுக்கும்,எந்த சமாதானத்திற்கும் இடம் கொடுத்து ஏமாறாமல் உஷாராய் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்தான் கொடுத்த பணத்தில் தொண்ணூறு சதவிகிதமாவது கைக்குக் கிடைக்கும்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பாஜக, அதிமுக அனுதாபிகளாக இருந்தால் இருந்தால் இந்த ஊடகம் அதை முதலில் சொல்லியிருக்கும். ஒன்றும் சொல்லாததால், இவர்கள் திமுககாரர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் உறுதிப்படுத்தாமல் இருப்பது தெரிந்ததே. நல்ல பயிற்சி

 • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

  சர்வ சாதாரணமாக அரசு ஊழியர்களிடம் கோடிகள் புரள்கின்றன.

Advertisement