dinamalar telegram
Advertisement

குளிர்கால கூட்டத் தொடர் பங்கேற்காத மன்மோகன்

Share
புதுடில்லி :உடல் நலனை கருத்தில் வைத்து நடப்பு குளிர் கால கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான மன்மோகன் சிங் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் முழுதும் அவர் பங்கேற்கப்போவதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:ராஜ்யசபா எம்.பி., மன்மோகன் சிங், எனக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். உடல் நலனை கருத்தில் வைத்து, இந்த கூட்டத்தொடரில் தன்னால் பங்கேற்க இயலாது என அவர் கூறி உள்ளார்; அதற்கு அனுமதி வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
பின், கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கான அனுமதியை மன்மோகன் சிங்கிற்கு வழங்க, அனைத்து எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • அப்புசாமி -

    ஆமாம். பிரதமரா இருந்த போதே வாயைத் தொறக்காதவர், இங்கெ பார்லிமெண்ட்டுக்குப் போய் பேசி சாதிக்கப் போறாராக்கும்? ஏதோ அதிர்ஷ்டத்தில் 8 வருஷம் பிரதமரா ஓட்டியாச்சு. ஊட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. காங்கிரஸ் பொழைக்கணும்னா இளைஞர்களுக்கு வாய்ப்பு குடுங்கள்.

    • Amal Anandan - chennai

      இப்ப இருப்பவர் மட்டுமே என்ன கேள்விக்கு பயந்து ஓடுறவர் தானே

    • Anand - chennai

      கேள்வி கேளுங்கள் பதில் கூறுகிறோம் சபை நாகரிகத்தை பேணுங்கள் என இப்போ இருப்பவர் கூறியும் எதிரி கட்சிகள் சபையை ரணகளமாக்கி அக்கப்போர் செய்வது தெரியவில்லையா? அந்நியனுக்கு கூஜா தூக்கும் கழிசடை கூட்டம்...

    • Amal Anandan - chennai

      சும்மா இப்படி வெட்டியா திட்டுறதில் எந்த பயனும் இல்லை. பிஜேபி முன்பு செய்ததை இப்போது இருக்கிற எதிர்க்கட்சிகள் செய்கின்றன. வினைப்பயன்.

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    வயசான காலத்தில உள்ள உட்காராம வெளி நடப்புன்னு சொல்லி வெளியே வர சொல்லும் காங்கிரஸ். இதற்கு வீட்டிலேயே இருக்கிறேன்ன்னு சொல்லி இருப்பார் பாவம்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    கண்டிப்பாக அன்புமணியை விட அதிக நாட்கள் ராஜ்யசபாவில் ஆஜராகி இருப்பார் மன்மோகன்சிங்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இதுவரை சபையில் இவர் வாய் திறந்து பேசியதே இன்னும் 7 தலைமுறைக்கு போதுமானது. இனி பேசுவதற்க்கு அவரிடம் ஏதாவது பாக்கி இருக்குமா என்பதே கேள்விகுறி.

  • M.S.Jayagopal - Salem,இந்தியா

    அரசின் பதவிகளுக்கு குறைந்த பட்ச வயது இருப்பதுபோல் அதிக பட்ச வயதும் நிர்ணயிக்கப்படவேண்டும்.

Advertisement