dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 715 ஆக சற்று குறைந்துள்ளது: 748 பேர் நலம்

Share
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 718 ல் இருந்து 715 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 748 பேர் குணமடைந்து உள்ளனர்.


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,569 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 711 பேரும் , அசாம்- 1, மேற்கு வங்கம்-1, பீஹார் -1, சத்தீஸ்கர் -1, வெளி மாநிலத்திலிருந்து வந்த 4 பேர் உள்பட 715 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,28,350 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,44,72,727 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 420 பேர் ஆண்கள், 295 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,92,502 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,35,810 ஆகவும் அதிகரித்து உள்ளது. 748 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,83,691 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 5 பேரும், அரசு மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,504 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,02 ம் தேதி) 123 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக விபரம்



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement