dinamalar telegram
Advertisement

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு உள்ளான மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

Share
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலம் இன்று (டிச.02) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 63. 1983ல் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.



கடந்த செப்டம்பரில் இவரது சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தலைமை செயலக காலனியில் உள்ள வீட்டில் வெங்கடாசலம் இன்று (டிச.02) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (31)

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    "தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்." இந்த காமெடி தானே வேண்டாம்ன்றது ?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    குடும்பமாவது அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மாசடைந்த மனது????

  • theruvasagan -

    அதெப்படி. ஊழல் வழக்கில் சிக்கின அதிகாரிகள் அல்லக்கைகள் தான் தற்கொலை செஞ்சுக்கிறாங்களே தவிர ஒரு அரசியல்வியாதி கூட இப்படி செஞ்சுக்கிறது இல்லையே. குறைந்த பட்சம் இப்படி யோசிக்கறது கூட இல்லையே.

  • rajan -

    ஸ்டாலின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்..2ஜி ஊழல் ராசாவின் டிரைவர் சாதிக் பாஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார். எல்லாவற்றையும் விசாரித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள்.

    • Barakat Ali - Medan

      திருச்சியில் முன்னால் அமைச்சர் K.N.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் சிபிஐ விசாரித்தது இன்றுவரை கொலையாளி பிடிபடவில்லை

Advertisement