dinamalar telegram
Advertisement

விமானம் வாங்கும் அரசு, விவசாயிகளுக்கு பணமில்லை என்கிறது: பிரியங்கா விமர்சனம்

Share
லக்னோ: கோவிட் காலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் தனியார் விமானங்கள், பார்லிமென்டை அழகுப்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி செலவிடும் மத்திய அரசு, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரம் கோடியை செலுத்த பணம் இல்லை என்கிறது என காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் மொராதாபாத்தில் நடந்த பேரணியில் பிரியங்கா பேசியதாவது: வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறது. 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி மையங்கள் திறக்கப்படும். வேளாண் சட்டங்களை எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தவில்லை. கரும்பு விவசாயிகளுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்த 4,000 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோவிட் பரவல் காலத்தில் பிரதமர் மோடி ரூ.8,000 கோடியில் தனியார் விமானங்களை வாங்கியுள்ளார்.
பார்லிமென்டை அழகுப்படுத்த மத்திய அரசு ரூ.20,000 கோடி செலுத்துகிறது. ஆனால் விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்த பணம் இல்லை என்கிறது. உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2500க்கும், கரும்பு குவிண்டால் ரூ.400க்கும் வாங்குவோம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

 • RajanRajan - kerala,இந்தியா

  பப்பி உங்கம்மா தர்பார் காலத்துலே கோடிக்கணக்கில் கிங்பின் களை உருவாக்கி மொத்த அரசு பணமும் லஞ்ச ஊழலுக்காகவே சரிக்கட்ட பட்டது. ராணுவத்திற்கு புல்லட் கிடையாது. சேட்டன் அந்தோணி போர் விமானம் வாங்க இந்திய அரசிடம் பணமில்லை என புலம்பல். உங்கம்மா தார்பார் ராணி சீன ஒப்பந்தம் போடு மவனூடே சேர்ந்து சைனீஸ் புட் என்ஜாய் பண்ணிச்சு. ஒரு திஹார் சாமீன் வாசி மொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து நம்ம நோட் அடிக்கிற மிஷினை பாக் தீவிரவாதிகளுக்கு வித்து துட்டு பார்த்தான். இன்னிக்கு பார் மோடி சர்க்கார் சீனாவையும் பாகிஸ்தானையும் கண்ணில் விரல்விட்டு ஆட்டுது. இது எப்படின்னு உங்க கிச்சன் கேபினெட் தத்திகளுடன் அதாவது சிபில் பாய் சொன்ன ஆன்மா இல்லாத உடல்களிடம் கேட்டு தெரிந்து கொள். சும்மா தருவோரமா கும்மியடிச்சது போதும். ஜெய் ஸ்ரீராம்.

 • ssh - mali,மாலத்தீவு

  இலவசத்தை நம்பி மோசம் போகாதீர்கள்..தமிழகத்தின் திராவிட விடியல் ஆட்சியை பார்த்து திருந்துங்கள்

 • Ram - ottawa,கனடா

  எல்லாத்தையும் ஓஸிக்கே செலவு செஞ்சா நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் , மக்களின் நிலை மோசமாதா ? அரசியலுக்கு ஒரு அளவேயில்லையா

 • மோகனசுந்தரம் -

  இவர் வேற சூழ்நிலை தெரியாமல் ஜோக் அடிக்கிற. நீங்க தான் எத்தனையோ ஆண்டுகள் ஆண்டிர்களே அப்போல்லாம் ... இப்போ என்ன பேச்சு.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவரையெல்லாம் எதோ பெரிய அரசியல்வாதி என்று கருதி அவர் சொல்வதெல்லாம் வேதவாக்காக வெளியிடவேண்டுமா?

Advertisement