dinamalar telegram
Advertisement

ஒமைக்ரான் தாக்கம்; மஹா., அரசின் 8 உத்தரவுகள்

Share
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தை தடுக்க உத்தவ் தாக்கரே அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக முக்கிய உத்தரவுகளை மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பிறப்பித்துள்ளது.

அவை என்னென்ன என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உத்தரவு 1



தென்னாப்பிரிக்கா, போஸ்வானா, நமீபியா, லெசோத்தோ, ஜிம்பாவே உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு ஏழு நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக கடைபிடிக்கப்படும்.

உத்தரவை 2



மேற்கண்ட இந்த நாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

உத்தரவு 3



ஏழு நாள் தனிமைப்படுத்துதல் இருக்கு பின்னர் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் முடிவு எதிர்மறையாக இருந்தால் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

உத்தரவு 4



ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வருவோருக்கு ஆர்டிஆர் பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

உத்தரவு 5



உள்ளூர் விமானங்களில் பயணிகள் பயணத்துக்கு முன்னர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கோவிட் தாக்கம் இல்லை என நிரூபிக்க வேண்டும். இந்த பரிசோதனை விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டு இருக்கவேண்டியது குறிப்பிடத்தக்கது.

உத்தரவு 6



மத்திய அரசின் கோவிட் கட்டுப்பாடுகள் வேறு, மகாராஷ்டிர மாநில அரசின் கோவிட் கட்டுப்பாடுகள் வேறு.

உத்தரவு 7



கோவிட் தாக்கத்தில் முதல் அலையின்போது இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. இதன்காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல் மாநில அரசு குடிமக்களை தற்காத்துக்கொள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும்.

உத்தரவு 8



மஹா., குடிமக்களின் நலன் கருதி மாநில அரசு அவ்வப்போது சில கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பு உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • krish - chennai,இந்தியா

    once bitten, twice shy.

Advertisement