dinamalar telegram
Advertisement

ஏராளமான அரசு பள்ளி கட்டப்படும்: வீரமரணம் அடையும் வீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: கெஜ்ரிவால் வாக்குறுதி

Share
சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், ஏராளமான அரசு பள்ளிகள் கட்டப்படும் எனவும், எல்லையில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

பஞ்சாப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டில்லியில் ஆட்சி அமைத்து வரும் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப்பில் அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,2) நடந்த பிரசாரத்தில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பேசியதாவது: இந்திய ராணுவத்தில் குர்தாஸ்பூர் மற்றும் பதன்கோட் பகுதியில் தான் அதிகளவு பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர். அதேபோல், போர்களில் அதிக வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் இந்த இரு பகுதியில் தான். ராணுவ வீரர்களின் மண்ணில் இருப்பது பாக்கியமாக கருதுகிறேன்.
கடந்த ஆண்டு மெலனியா டிரம்ப் டில்லி வந்திருந்தபோது, டில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட விரும்பினார். டில்லி அரசு பள்ளிகள் அமெரிக்காவிலும் பிரபலமாக உள்ளன. பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, லண்டனில் இருந்தும் மக்கள் பஞ்சாப்பில் உள்ள அரசு பள்ளிகளை பார்க்க வருவர். நான் உங்களிடம் இரு வாக்குறுதிகளை அளிக்கிறேன். ஆம்ஆத்மி ஆட்சி அமைத்ததும், பஞ்சாப்பில் அதிகளவு அரசுப் பள்ளிகள் கட்டப்படும். டில்லியை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்குவது போல், பஞ்சாப் ராணுவத்தினர் எல்லையில் வீரமரணம் அடைந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • vbs manian - hyderabad,இந்தியா

  இந்த இலவச கூத்து நம்மை விட ஏழ்மையில் உள்ள ஆப்பிரிக்கா நாடுகளில் கூட இல்லை.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  கோமாளி யின் கையில் ஏர்கேனாவெ ஒரு அரசு எடுப்பார்க்காயின் பிள்ளாயாக செயல் படுகிறது. மாற்று முல்லா ஒரு சில அரசுகள் அதன் கையில் கிடைத்தால் நாடு தாங்காது.

 • வீரா -

  இந்திய ராணுவம் துல்லியய தாக்குதல் நடத்தியதற்கு சான்று கெட்டவன் இவன். அப்படியே raanuva வீரர் யாரவது எதிரி ராணுவதால் கொல்லப்பட்டால் கூட பாகிஸ்தானிடமிருந்து கொன்றதற்கான சான்று வாங்க சொல்லி தான் கம்யூனிஸ்ட்காரனை விட மிக மோசமானவன் என்பதை காட்டிகொள்வான். டெல்லியை சேர்ந்த மற்றும் பாக்

 • s t rajan - chennai,இந்தியா

  அள்ளி விடுங்கள் வாக்குறுதிகளை. எங்கள் தளபதி ஆட்சியில் இங்கு 1000 ரூவா வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முடியாம திணறுகிறார்கள். மத்திய அரசு excise வரிகளை குறைத்தும் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காமல் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார் எங்கள் நிதி அமைச்சர். பஞ்சாப் மக்களே இந்த வாக்குறுதித் திலகங்களை அரசியலில் இருந்து ஓரம் கட்டுங்கள். டெல்லியில் கொட்டிய குப்பை பத்தாதுன்னு இப்ப பஞ்சாப்பில் கால் வைய்க்க முயல்கிறார் கேஜ்ரிவால்.... வாலை ஒட்ட அறுத்து அனுப்புங்கள் இந்த வாய்ச் சொல் வீணரை. .

 • Kalyanam Siv - Chennai,இந்தியா

  மிக்க நன்றி . வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தங்கள் செலுத்தும் மரியாதை மகத்தானது . அவர்களின். தியாகத்தை மதிக்கும் , போற்றும் உங்களுக்கு மிக மிக நன்றி . இதனை பின்பற்றி மற்ற மாநிலங்களும் , மத்திய அரசும் தியாகத்தை மதிக்க பின்பற்ற வேண்டுகிறேன் . அவர்களின் நலன் காக்க அணைத்து அரசு முன் வரவேண்டும் . மத்திய அரசும் வீரர்களின் நலன் காக்க முன் வரவேண்டும் . வெறும் இரண்டு லட்டு கொடுத்து ஏமாற்ற கூடவே கூடாது .

Advertisement