அரசின் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை விஞ்ஞானி ஆய்வு
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், ஐம்பது கோடி மதிப்பீட்டில், முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காய்கறி, பழங்கள், தானிய வகைககள் உள்ளிட்ட பொருட்கள் அழுகுவதை தடுத்து, தொடர் வினியோக மேலாண்மை திட்டத்தில் அமைத்துள்ள நிலையத்தை, அணு விஞ்ஞானி டாக்டர்.டேனியல் செல்லப்பா ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ள நிலையில், ரேடியேஷன் யூனிட்டை ஆய்வு செய்தார். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும், இந்த நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் முதன்மை பதப்படுத்தும் நிலைய அதிகாரி ஜீவானந்தம், பாதுகாப்பு அலுவலர் சிவந்தன், மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!