dinamalar telegram
Advertisement

கோயம்பேடில் காய்கறி விலை உயர்வு கத்தரி, அவரை கிலோ ரூ.100க்கு விற்பனை

Share
Tamil News
சென்னை-தக்காளி, கத்தரிக்காயை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மழை காரணமாக, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கிலோ 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மஹாராஷ் டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவதால், விலை குறைந்து உள்ளது.தற்போது சென்னை கோயம்பேடில், மொத்த விலையில் கிலோ தக்காளி 50 முதல் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ந்து கத்தரிக்காயும் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக அவரைக்காய் கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 முதல் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோயம்பேடில் கழித்து கட்டப்பட்ட இரண்டாம், மூன்றாம் தர காய்கறிகளும் 100 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படுகிறது. உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • John Miller - Hamilton,பெர்முடா

    இவளவு விலை கொடுத்து காய்கறிகளை வாங்கி சமைக்கலாம் என்றால் மோடி ஆட்சியில் சமையல் சிலிண்டர் படம் எடுத்து ஆடும் பாம்பை போல் விலை அதிகமாகி உயிரை எடுக்கின்றது.

  • gopalasamy N - CHENNAI,இந்தியா

    ஒட்டு போட்ட மக்கள் சந்தோசமாக உள்ளனர் அடுத்த 5 (பைவ்) ஆண்டுகள் மிக சந்தோசம்தான்

  • Visu Iyer - chennai,இந்தியா

    நூறு ருபாய் கொடுத்து பெட்ரோல் போடும் மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கியாஸ் வாங்கும். நம்மவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விலை உயர்வு அல்ல.. இதே விலை இருந்தாலே போதும்.. இதுவே குறைவு தான்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    தை 1 ந்தேதி தமிழ் வருடமாக கொண்டாடவேண்டும் என்ற வரலாற்று சிறப்பு முக்கிய விஷயத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சி எடுத்துக்கொண்டுள்ள நிலையில் அதை மக்கள் கவனித்திலிருந்து மடைமாற்றும் செய்ய பிற்போக்கு சக்திகளின் தீட்டிய சதியாகத்தான் இந்த செய்தியை பார்க்கமுடிகிறது. மே 7 ந்தேதியிலிருந்து தமிழன் விழித்துக்கொண்டு விட்டான் என்பதை நினைவிருந்துங்கள்.

Advertisement