ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 674 ஏரிகள் உள்ளன. இதில் பரப்பளவில் பெரிய 211 ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கிராம ஊராட்சி பராமரிப்பில் 263 ஏரிகள் உள்ளன. கோமுகி, மணிமுத்தா, தென்பெண்ணை ஆற்றில் உள்ள தடுப்பணைகள் மூலம் 50 ஏரிகள் தண்ணீர் வரத்து பெறுகிறது.பருவமழைக் காலங்களில் ஏரி நிரம்பும் போது கோடி தடுப்பு வழியே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளில் ஏரிகளின் வரத்து வாய்க்கால் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து மழைக் காலங்களில் பல ஏரிகள் நிரம்ப வழியின்றி இருந்தது.பெரும்பாலான ஏரிக்கரைகள் மற்றும் மதகுகள் செப்பனிடப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளன. கரைகளை பலப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் மரங்கள் வெட்டப்படுவதும், ஏரிக்கரையை சேதப்படுத்தி மண்ணை திருடிச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.இதனைப் பாதுகாக்க வேண்டிய வருவாய்த் துறையினர் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் கிராமத்தில் உள்ள ஊராட்சிக்குட்பட்ட ஏரிகள் பெருமளவு பராமரிப்பின்றி உள்ளது.பொதுப்பணித் துறையினரும் நீர் நிலைகளை செப்பனிட்டு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வரலாறு காணாத கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதுவரை தண்ணீர் புகாத மேடான பகுதிகளில் கூட மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் பலவீனமாக உள்ள பல ஏரிகளில் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோடிக்கரையில் வெளியேறும் தண்ணீரின் அளவை விட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக ஏரிக்கரை உடைந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதி அல்லது விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இத்தருணத்தில் பலவீனம் அடைந்த ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுப்பணித்துறை, வருவாய், ஊரக வளர்ச்சி துறை இணைந்து உள்ளாட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு அவசரகால நடவடிக்கையாக ஏரிக்கரைகளை கண்காணித்து பலப்படுத்துவது அவசியமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!