dinamalar telegram
Advertisement

நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Share
சிவகங்கை : வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச.,3)தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.சிவகங்கை வேலை வாய்ப்பு அலுவலகத்தில்வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று


தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 10:30 மணிக்கு நடத்தப்பட்டு வருகிறது. டிச., 3ல் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறலாம்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் காத்திருப்பவர்கள், தங்களது பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு



உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தங்களது கல்விச்சான்று, ரேஷன்கார்டு, வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement