dinamalar telegram
Advertisement

வைகையில் வெள்ளப்பெருக்கு: மக்கள் அலட்சியம்

Share
திருப்புவனம் : திருப்புவனத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இருகரையையும் தண்ணீர் தொட்டுச் செல்லும் நிலையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வைகை அணையில் இருந்து உபரி நீர் 7 ஆயிரம் கன அடிக்கும் மேல் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.


வைகையின் இரு கரையையும் தொட்டு தண்ணீர் பாய்ந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றுப்படுகைக்கு யாரும் செல்ல கூடாது, ஆடு, மாடு களை குளிப்பாட்ட கூடாது, மீன் பிடிக்க செல்ல கூடாது என போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கு எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லை. 7 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில் தண்ணீரை வேடிக்கை பார்க்க பலரும் ஆற்றின் வெகு அருகில் செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement