dinamalar telegram
Advertisement

சிவகங்கையில் வீடுஇடிந்து விழுந்தது

Share
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் பொருட்கள் சேதமடைந்தது. வாணியங்குடி ஊராட்சி, இந்திரா நகர்,


மருதப்பா கோயில் பகுதியில் வசித்து வருபவர் சேகர் 55, இவர் மனைவியுடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இவர் வசித்து வந்த வீடு மழை காரணமாக ஈரத்துடன் இருந்த மண்சுவர், ஓட்டுக்கட்டடம் முழுமையாக இடிந்தது.இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக வீடு இடிந்த போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    நல்லவேளை -உயிர் சேதம் இல்லை .

Advertisement