dinamalar telegram
Advertisement

காளையார்கோவிலில் கழுத்தறுத்து வாலிபர் கொலை  

Share
சிவகங்கை:காளையார்கோவில் அருகே பெரியகண்ணனுாரில் பழிக்குப்பழியாக கீழக்குளம் பிரவீன் 24, கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே கீழக்குளம் காளிமுத்து மகன் பிரவீன் 24. இவர் தன் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனுாரில் கிராம பொது கூடத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி., பால்பாண்டி விசாரித்தனர். 2019ல் திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரில் பிரசாந்த் 24, என்பவரை பிரவீன் கொலை செய்து தலைமறைவானார். இதற்கு பழி தீர்க்கபிரசாந்தின் சகோதரர் மாத்துார் ஊர்க்காவலன் 27, நேற்று பெரியகண்ணனுாரில் பிரவீனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement