dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.எஸ்.,ல் பயிற்சி பெற்றவர்கள் நாட்டுக்காக உழைப்பை அளிக்கின்றனர்

Share
கோவை: ஆர்.எஸ்.எஸ்., இயக்க தென் தமிழ்நாடு பயிற்சி முகாம் நிறைவு விழா, சரவணம்பட்டி கே.ஜி., கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.பயிற்சி முகாமில், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ்.,இயக்கம் என்பது ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் களைந்து, 'அனைவரும் ஒருவரே; நம் அனைவருக்கும் ஒரே தேசம்' என்ற ஒருமித்த கருத்து அடிப்படையில், பயிற்சி அளித்து வருகிறது.ஆர்.எஸ்.எஸ்.,பேரியக்கத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, தேசபக்தி ஆகியவை முறையான பயிற்சியின் வாயிலாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. அந்த பயிற்சியை முழுமையாக கற்றுத்தேர்ந்தவர்கள், நம் நாட்டுக்காக அவர்களது உழைப்பை செலவிடுகின்றனர்.இயற்கை பேரிடர் காலத்தில் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றனர். கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கல்வி போதிக்கின்றனர். மருத்துவ வசதி கிடைக்காதவர்களுக்கு உதவுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் கே.ஜி., குழுமங்களின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை உரை நிகழ்த்தினார். ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார். பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு சாகசங்களையும், பயிற்சிகளையும் நிகழ்த்தி காண்பித்தனர்.தென் தமிழகத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement