dinamalar telegram
Advertisement

பாடம் சொல்லிக்கொடுத்த மூன்று மையங்களுக்கு விருது 

Share
கோவை: கற்போம் எழுதுவோம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய, மூன்று மையங்களுக்கு, மாநில எழுத்தறிவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடிப்படை எழுத்தறிவு பெறாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கற்போம் எழுதுவோம் திட்டம் சார்பில், எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது. அரசுப்பள்ளிகளை மையமாக அறிவித்து, அப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைப்பில், தன்னார்வலர்கள் உதவியோடு தினசரி இரண்டு மணி நேரம், வகுப்புகள் கையாளப்பட்டன.இங்கு படித்தவர்களுக்கு பிரத்யேகமாக, தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாக செயல்பட்ட மையங்களுக்கு, மாநில எழுத்தறிவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு மூன்று மையங்கள் வீதம், மொத்தம் 114 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், கற்போம் எழுதுவோம் திட்டத்திற்கு சிறப்பாக செயலாற்றிய, காளப்பநாயக்கன்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட, பூராண்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த, கெட்டிமல்லன்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய, மூன்று பள்ளிகளும், அப்பள்ளிகளில் வகுப்பு கையாண்ட மூன்று தன்னார்வலர்களுக்கும், விருது வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement