dinamalar telegram
Advertisement

யானைகள் வனத்தை விட்டு வெளியில் வருவது அதிகரிப்பு: வனத்துறை ஆய்வில் தகவல்

Share
கோவை: கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், நவ., மாதம் வனத்தை விட்டு காட்டு யானைகள், வெளிவரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் குறித்து, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தினமும் எத்தனை யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பயிர்களை உட்கொள்கின்றன, யானை-மனித மோதல்கள் என்பது குறித்தெல்லாம், எல்லையோர இரவு ரோந்து குழுவினர்(பி.என்.பி.டி.,) ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் அடிப்படையில், வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில், 283 முறை வனத்தை விட்டு யானைகள் வெளிவந்த நிகழ்வுகள் நடந்திருப்பது, வனத்துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.கோவை கோட்ட வனத்துறை வெளியிட்டுள்ள
அறிக்கையில், 'யானைகள் வனத்தை விட்டு வெளி வருவது குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக யானைகள் உணவுக்காக வெளியில் வருகின்றன. வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள வயல்களில் உள்ள பயிர்களை உட்கொள்கின்றன.நவ., மாதம், மொத்தம், 283 நிகழ்வுகள் நடந்துள்ளன. சராசரியாக தினமும், 10 யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்துள்ளன. இது போல், இந்தாண்டு அக்., மாதத்தில், சராசரியாக எட்டு நிகழ்வுகள் நடந்துள்ளன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement