dinamalar telegram
Advertisement

12 நாடுகளில் இருந்து வந்த பயணியர் 6 பேருக்கு கோவிட் உறுதி

Share
புதுடில்லி: கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 12 நாடுகளில் இருந்து வந்த 6 பயணியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் தென் ஆப்பரிக்கா,சீனா, நியூசிலாந்து,ஹாங்காங்,பிரிட்டன், பிரேசில், வங்க தேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல்உள்ளிட் 12 நாடுகளில் இருந்தும், அங்கிருந்து இதர நாடுகள்வழியாக வரும் அனைத்து பயணியருக்கும் கோவிட் பரிசேதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தெரிவித்து இருந்து.

இந்நிலையில் 11சர்வதேச விமானங்களில்இருந்து வந்த பயணியர் 3,476 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் பயணியருக்கு ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒமைக்ரான் இருக்கிறதா என்பதை கண்டறிய ஆறுபேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Intha viyaathigal vaiththu eththanai maruthuvamanai kal kalla kattapogiraargalo theriyale

  • Tamilan - NA,இந்தியா

    ஆறு பேரை கண்டுபிடிக்க 3500 பேரை சோதிக்க வேண்டியுள்ளது . இது மனித உரிமைக்கு எதிரானது. போக விஞ்சானம் தற்போதைய சூழலை சமாளிக்க இனியும் ஆயிரம் பங்கு வளரவேண்டியுள்ளது.

  • R S BALA - CHENNAI,இந்தியா

    இந்த ஆறு எப்படியெல்லாம் பயணிச்சு எத்தனை கிளையை உருவாக்க போகுதோ தெரியலேயே தேவுடா...

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    அந்த ஆறு கொரோனா தொற்று நோயாளிகளை ஹோஸ்பிடலில் தனிமை படுத்தி எல்லா டெஸ்ட்டுகளையும் செய்யவேண்டும்.

Advertisement