தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சி பகுதி பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மற்றும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் அதிகரித்து விளை நிலங்களை சூழ்ந்துள்ளது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைப்பகுதிக்கு வரும் கூடுதல் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!