dinamalar telegram
Advertisement

சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது தள்ளிப்போகுது

Share
புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, டிச.,15ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது என்ற முடிவை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஒத்தி வைத்தது. மீண்டும் துவங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.

கோவிட் பரவல் காரணமாக இந்தியாவில், கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, வரும் டிச.,15ம் தேதி முதல் துவங்கும் என டிஜிசிஏ அறிவித்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஒமைக்ரான்' என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், அச்சுறுத்தல் மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது. அதேபோல், இந்தியாவும் தடை விதிக்க வேண்டும் எனவும், டிச.,15ம் தேதி துவங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் பலரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைத்து, டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அனைத்து துறையினருடன் ஆலோசனை அடிப்படையில் நிலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதனாலென்ன அப்புறம் இந்த நஷ்டத்தையும் வட்டியுடன் சேர்த்து அப்பாவி பயணிகள் தலையில் சுமாத்திட்டா போகுது .நம்ம அதிகாரிகளுகா யோசனை தெரியாது இந்திய அதிகாரவர்க்கம்னா சும்மாவா கோவிட்டில் ஏழைகளுக்கு பத்துபைசா கூட உதவிசெய்யாத நிதியமைச்சரை கொண்டுள்ள பெருமைபடைத்த நாடல்லவா இந்தியா

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    மீண்டும் விமான சேவை நிறுவனங்களுக்கு பிரச்சினை. நஷ்டம்.

  • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

    Scientific name ஐ தான் corona க்கு வச்சுருக்கானுக

  • Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ

    எல்லா விமான பயணியரும் இந்த வைரஸ் carriers. அணைத்து ஏர்போர்ட்களும் இந்த வைரஸ் பரப்பும் idangal. விமான பயணம் தவிர்க்கப்படவேண்டிய onru.

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

    அதான் விடியல் போன வாரம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் இல்லே. பின்னே விளங்கிடும். தகரமுத்துவுக்கு வாழ்த்து சொன்னார் பரிசு பறி போனது. தகரத்துக்கு பாராட்டு தெரிவிச்சார் சர்ச்சை எழுந்தது. முல்லைப்பெரியாறு விடயத்தில் பினராயி விஜயனுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினார் காரியம் கெட்டது. இதுவும் அப்படித்தான். வால்க விடியாமடியல்,வால்க வடியா வெள்ளம்.

Advertisement