dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு: சட்டவிதிகளில் திருத்தம்

Share
சென்னை: ‛‛அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்,'' என்று அ.தி.மு.க., சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,1ம் தேதி) நடந்தது. இதில் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்படும் சட்டதிட்ட விதிமுறைகள் வருமாறு; அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்.

சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொன்னையன், தமிழ்மகன் உசேன், தனபால் ஆகியோர் முன்மொழிந்தனர்.

ஜெயக்குமார் விளக்கம்



தீர்மானம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உறுப்பினர்களாக இருப்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் தான் ஓட்டுப்போட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்வர் ராஜாவை, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கியது சரியான நடவடிக்கை தான். சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால், ஆள் ஆளுக்கு பேச துவங்கி விடுவார்கள். அந்த வகையில் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தற்காலிக அவைத்தலைவர் நியமனம்



அ.தி.மு.க., அவை தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு அந்த பதவிக்கு ஒருவரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிகமாக அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    நகராட்சி தேர்தல், இடைத்தேர்தல், பார்லிமென்ட் தேர்தல் இவைகளில் தொடர்ந்து படுதோல்வி அடைந்தால் ....அடிப்படை உறுப்பினர்களே மாத்தி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்....ஆமா இந்த ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நிரந்தரமானதா அல்லது ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரீ-எலெக்ஷன் நடத்துவார்களா?...

  • padma rajan -

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    இதெல்லாம் கட்சி விவகாரம் மற்ற கட்சிகள் மாதிரி தாங்கள் சொல்வது தான் சட்டம் என்று இல்லை முடிந்தால் அவங்கல சொல்லி பாருங்களேன் அதுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    அதிமுக -வினர் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இவர்கள் சொல்லுவதிலிருந்து, தலைமை காலியாக உள்ளது. அது சசிகலா -விற்கு காலியாக வைக்கப்பட்டுள்ளதா? Say yes or no. இரண்டாவது கட்சியில் ஐந்து வருடம் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே மேற்சொன்ன இருவர்களையும் தேர்ந்தெடுக்க தேர்தல் கமிஷன் மூலம் மினி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

  • periasamy - Doha,கத்தார்

    இந்த கட்சி விரைவில் கடலில் கரைத்த பெருங்காயமாக மாறிவிடும்

    • SKANDH - Chennai,இந்தியா

      நீ இருக்குமிடத்தில் கடலில் கரைத்த பெருங்காயம் போலாகாமல் ஓடி வந்துடு.

Advertisement