ADVERTISEMENT
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த 7 ம் தேதி முதல் ஒரு வாரம் கொட்டி தீர்த்தது,
இதனால், கடலுாரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. அடுத்து, 18 ம் தேதி ஒரே நாளில் 15 செ.மீ., பெய்த கனமழையால் மீண்டும் தாழ்வான பகுதிகள் குளமாகியது. மறுநாள் (19ம் தேதி) தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மாவட்டத்தில் பண்ருட்டி துவங்கி, கடலுார் வரையில் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான நகர் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
கடலுார் தென்பெண்ணையாற்று கரையோர பகுதிகளான செம்மண்டலம் குறிஞ்சி நகர், வெளி செம்மண்டலம், கணபதி, நகர், சூரியா நகர், அரசு குடியிருப்பு, திடீர்குப்பம், கோண்டூர் கம்பர் தெரு, செயின்ட் ஜோசப் நகர் பகுதிகள் தத்தளித்தன.வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
பலர் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொக்லைன் மூலம் வடிகால் ஏற்படுத்தி, மோட்டார் பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சில நகரங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.மீண்டும் வெள்ளக்காடுஇந்நிலையில், கடந்த 27 ம் தேதி மீண்டும் மழை துவங்கியது, 28 ம் தேதி காலை முதல் 29 ம் தேதி காலை வரையில் ஒரே நாளில் 17.3 செ.மீட்டர் கன மழை பெய்ததால், கடலுார் நகரம் மீண்டும் வெள்ளக்காடானது.
பாரதி சாலை, நேதாஜி சாலை, சிதம்பரம் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, கடலுார் சில்வர் பீச் ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தண்ணீர் குளமாக தேங்கியது.மேலும் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், கே.கே.நகர், பாரதியார் நகர், கடலுார் முதுநகர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், சாவடி உட்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதித்த மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.நேற்று முன்தினம் காலை முதல் வெயில் காய்ந்து வருகிறது. மழை நீர் சூழ்ந்த 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மோட்டார் பம்பு வைத்து, தண்ணீர் வெளியேற்றும் பணி நடக்கிறது.
ஆனாலும், செம்மண்டலம் ஜோதி நகர், நண்பர்கள் நகர், கோண்டூர் சிவராமன் நகர், வெங்கடாஜலபதி நகர், செயிண்ட் ஜோசப் நகர், குண்டு உப்பலவாடி பெரியசாமி நகர், ராம் நகர், வண்ணாரப்பாளையம், வன்னியர்பாளையம் மற்றும் முதுநகர் பகுதியில் உள்ள பல நகர்களில் தண்ணீர் வடியாமல் கடந்த 3 நாட்களுக்கு தேங்கியுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சுகாதார சீர்கேடுடன் கொசு தொல்லை அதிகரித்து, மக்கள் அவதியடைகின்றனர்.மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தண்ணீரை வெளியேற்றி, அப்பகுதியில் நோய் பரவாமல் தடுக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!