dinamalar telegram
Advertisement

எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீடு 301... 170 இடங்களை வழங்கின 3 கல்லூரிகள்

Share
Tamil News
புதுச்சேரி, : எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு, இந்தாண்டு 3 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 170 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.

இத்துடன் அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள இடங்களையும் சேர்த்து, இந்தாண்டு மொத்தம் 301 எம்.பி.பி.எஸ்., இடங்கள்அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இது தவிர, மணக்குள விநாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா ஆகிய தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன

.இந்த மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆண்டுதோறும் அரசினால் பெறப்பட்டு, சென்டாக் கவுன்சிலிங் மூலம் நிரப்பப் பட்டு வருகிறது.கடந்தாண்டு இந்த மூன்று தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 450 எம்.பி.பி.எஸ்., சீட்களில், தலா 55 வீதம் 165 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது.இந்தாண்டிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து அண்மையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

.இதில், கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் இடங்களை தர வேண்டும் என அரசு தரப்பில், தனியார் கல்லுாரி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.குறிப்பாக, கடந்தாண்டை காட்டிலும் 5 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரித்து தர வேண்டும் என, அரசு வலியுறுத்தியது.இதனை தனியார் மருத்துவக் கல்லுாரிகளும் தற்போது ஏற்றுக்கொண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்துள்ளன.

இதன்படி, பிம்ஸ், மணக்குள விநாயகர் ஆகிய இரு மருத்துவ கல்லுாரிகளில் தலா 56 இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 58 இடங்களும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 170 ஆக அதிகரித்து உள்ளது.புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்களில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது.இத்துடன், மூன்று தனி யார் மருத்துவக் கல்லுாரிகள் வழங்கிய 170 சீட்களை சேர்த்து, 301 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீடாக மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது.

இந்த இடங்கள், பொது-50 சதவீதம், ஓ.பி.சி.,-11 சதவீதம், எம்.பி.சி.,-18, எஸ்.சி.,-16, எஸ்.டி.,-5, மீனவர்-2, முஸ்லிம்-2, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-5 என்ற விகிதத்தில் இட ஒதுக்கீடு வாரியாக, சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.உள் ஒதுக்கீடாக, மாற்றுத்திறனாளி-5 சதவீதம், விடுதலைப் போராட்ட வீரர்-4, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1, விளையாட்டு வீரர்-1 சதவீதம் என்ற விகிதத்தில் நிரப்பப்படும்.

இதன் மூலம், மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பொது-85, ஓ.பி.சி.,-18, எம்.பி.சி.,-31, எஸ்.சி.,-27, எஸ்.டி.,-1, மீனவர்-3, முஸ்லிம்-3, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-2, மாற்றுத் திறனாளி-8, விடுதலைப் போராட்ட வீரர்--7, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-2, விளையாட்டு வீரர்-2 என்ற அடிப்படையில் 170 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.தனியார் கல்லுாரிகளின்இட ஒதுக்கீடு விபரம்

பிம்ஸ்: பொது-28, ஓ.பி.சி.,-6, எம்.பி.சி.,-10, எஸ்.சி.,-9, மீனவர்-1, முஸ்லீம்-1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1, மாற்றுத் திறனாளி-3, விடுதலைப் போராட்ட வீரர்-2, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1.மணக்குள விநாயகர்: பொது-28, ஓ.பி.சி.,-6, எம்.பி.சி.,-10, எஸ்.சி.,-9, எஸ்.டி.,-1, மீனவர்-1, முஸ்லிம்-1, மாற்றுத் திறனாளி-2, விடுதலைப் போராட்ட வீரர்-2, விளையாட்டு வீரர்-1.வெங்கடேஸ்வரா: பொது-29, ஓ.பி.சி.,-6, எம்.பி.சி.,-11, எஸ்.சி.,-9, மீனவர்-1, முஸ்லிம்-1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1, மாற்றுத்திறனாளி-3, விடுதலை போராட்ட வீரர்-3, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1, விளையாட்டு வீரர்-1.அரசு மருத்துவ கல்லுாரியில்இட ஒதுக்கீடு விபரம்அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீடாக உள்ளது. 27 சீட்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 22 இடங்கள் என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

.131 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்திய மாணவர்களுக்கு பொது -126 சீட்டுகள் கிடைக்கும். அவை, பொது -51, இ.டபுள்யூ.எஸ்., -12, ஓ.பி.சி., -14, எம்.பி.சி., -22, எஸ்.சி., -21, மீனவர் -2, முஸ்லிம்-3, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் -1, மாற்றுத்திறனாளி -6, விடுதலைப் போராட்ட வீரர்-5, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு -1, விளையாட்டு வீரர் -1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும்.மாகி மாணவர்களுக்கான 5 சீட்டுகள் பொது -2, இ.டபுள்யூ.எஸ்., -1, ஓ.பி.சி., -1, எஸ்.சி., -1 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement