dinamalar telegram
Advertisement

மெட்ரோ நிலையங்களில் இருந்து 12 மினி பஸ் சேவை துவக்கம்

Share
Tamil News
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 12 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே துவக்கி வைத்தார்


.சென்னையில், போக்குவரத்து நெரிசலை குறைத்திட, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 2007ல் தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த, 2009ல் துவக்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் பயணியர் சிரமமின்றி விரைவாக பயண

ம் செய்ய ஏதுவாக, 12 இணைப்பு சிற்றுந்துகள், தினசரி, 148 நடைகள் இயக்கப்பட உள்ளன.இப்புதிய சிற்றுந்துகளை, நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, மாநகர போக்குவரத்துக் கழக இணைப்பு சிற்றுந்துகள் இயக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் இறையன்பு, மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் பிரதீப்யாதவ், போக்குவரத்து துறை முதன்மை செயலர் கோபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    போச்சுடா... இனிமே மெட்ரோ ஸ்டேஷன் வாயில்களில் ட்ராஃபிக் ஜாம் செஞ்சுருவாங்க. மெட்ராசில் இருக்கும் அரசு அலுவலகங்களைக் குறையுங்க. லஞ்சம், ஆட்டையப் போடுறதை பரவலாக்குங்க. லஞ்சம் ஒழியலேன்னாலும், ட்ராஃபிக் ஜாமாவது குறையும்.

Advertisement