Load Image
dinamalar telegram
Advertisement

60- ஐ பலாத்காரம் செய்த 19க்கு மரண தண்டனை; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Tamil News
ADVERTISEMENT

இந்திய நிகழ்வுகள்:ஜெய்ப்பூர்: 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞருக்கு மரணத்தண்டனை விதித்து ராஜஸ்தானில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹனுமான்கார் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 74 நாட்களில் கோர்ட் விரைவாக தீர்ப்பளித்தது.

மூதாட்டி பலாத்காரம்: இளைஞருக்கு துாக்குஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஹனுமன்கார்க் மாவட்டத்தில், சுரேந்திர மேக்வால், 19, என்ற இளைஞர், 60 வயதான முதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மேக்வாலை கைது செய்தனர். பின், அவருக்கு எதிராக அடுத்த ஏழு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி மேக்வாலுக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. வெறும் 74 நாட்களில் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

4 பெண்கள் கைதுபோபால்: மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர் சஞ்சீவ் ஜோஷி, 47. மெக்கானிக்கான இவர், சிலரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்தார். அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் சஞ்சீவ் ஜோஷி, அவரது தாய், மனைவி, இரு மகள்கள் ஆகியோர் சமீபத்தில் விஷம் குடித்தனர். ஐந்து பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே நால்வர் பலியான நிலையில், ஜோஷியின் மனைவி நேற்று இறந்தார். தற்கொலைக்கு துாண்டுதல் வழக்கில், கடன் கொடுத்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வாகனம் மோதி 5 பேர் பலிபிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம் கங்காபர் நவாப்கஞ்ச் பகுதி பஸ் நிறுத்தத்தில், நேற்று முன்தினம் இரவு புடவுனா கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் நின்றிருந்தனர். அந்த வழியாக சென்ற வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் ஐந்து பேரும் பரிதாபமாக பலியாகினர். வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்கு காரணமான வாகனத்தை தேடுகின்றனர்.

ரூ.44 கோடி மோசடிபுதுடில்லி: குஜராத்தின் ராஜ்கோட்டில் 'மன்தீப் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தினர் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் வாங்கினர். அதை முறையாக திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதால், வங்கிக்கு 44.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின் ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில், குற்றம் சாட்டப்பட்டோர் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

துப்பாக்கியுடன் 'செல்பி'; சிறுவன் பரிதாப பலிமீரட் : உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை நெற்றியில் வைத்தபடி, 'செல்பி' எடுத்தபோது எதிர்பாராதவிதமாக் துப்பாக்கி வெடித்து, 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உ.பி.,யின் மீரட் நகரில் உள்ள லிசாரி கேட் என்ற இடத்தில் வசிக்கும் உவைஷ் அகமது, 14, என்ற சிறுவன் நேற்று முன் தினம் துப்பாக்கியை தன் நெற்றிப் பொட்டில் வைத்தபடி மொபைல் போனில் செல்பி எடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது. தலையில் குண்டு பாய்ந்து உவைஷ் அகமது அதே இடத்தில் உயிரிழந்தார்.

தமிழக நிகழ்வுகள்:பஸ் மீது விழுந்த மரம்; உயிர் தப்பிய பயணியர்திண்டுக்கல்: அரசு பஸ் மீது ராட்சத மரம் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி -- வத்தலக்குண்டு சாலையில் நேற்று காலை 6:30 மணிக்கு 12 பயணியருடன், கொடலங்காடு ராஜாகானல் வனப் பகுதியில் அரசு பஸ் சென்றது. இரவு முழுதும் கன மழை பெய்த நிலையில், ராட்சத மரம் ஒன்று பஸ் மீது விழுந்தது. டிரைவர் கருப்பையா லாவகமாக ஓட்டியதாலும், விழுந்த மரத்தின் கிளைகள் சாலையின் மறுபுறம் எதிரே இருந்த மரத்தின் மீது விழுந்ததாலும், பஸ் அதிக சேதமின்றி தப்பியது. பயணியரும் உயிர் தப்பினர்.
Latest Tamil News

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; தந்தைக்கு ஆயுள்மதுரை : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது தந்தை தன் 12 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார். போலீசார் 'போக்சோ' சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி ராதிகா, தந்தைக்கு ஆயுள் தண்டனை 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை வாழ்நாள் இறுதி வரை அனுபவிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

பழனிசாமியின் உதவியாளர் திருச்சி சிறையில் அடைப்புகடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 29. இவருக்கு போக்குவரத்துக் கழகத்தில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணி, 52, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய பின், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மணியை, திருச்சி மத்திய சிறையில் அடைக்க சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், மணியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

'எம்.எல்.ஏ., கை வெட்டப்படும்': அட்டையுடன் வந்தவரால் அதிர்ச்சிதிருப்பூர் : 'எம்.எல்.ஏ., கை என்னால் வெட்டப்படும்' என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் கலெக்டர் அலுவலகம் வந்தவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

திருப்பூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் நாக குமார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.'திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் கை என்னால் வெட்டுபடப் போகிறது' என எழுதிய அட்டையை கையில் வைத்தபடி, போர்டிகோவில் நின்றார். அங்கிருந்த போலீசார், நாக குமாரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். நாக குமார் கூறுகையில், ''திருப்பூர் நாதம்பாளையத்தில் குடியிருந்தபோது, என் வீட்டில் இருந்த பொருட்களை சிலர் எடுத்து கொண்டனர். சம்பந்தப்பட்ட நபர்களை, வடக்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார் காப்பாற்றி வைத்துள்ளார்,'' என்றார்.

வாகன சோதனையில் பெண் பலாத்காரம்; பணத்தையும் பறித்த போலீஸ்காரர் கைதுமதுரை : மதுரையில், இரவு வாகன சோதனையின்போது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், விவாகரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்கிறார். கடந்த 27ம் தேதி இரவு மகேஷ், அவரது நண்பர் மற்றும் அப்பெண்ணுடன், செல்லுாரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்து திரும்பினார். அதிகாலை 2:30 மணிக்கு டவுன் ஹால் ரோடு பகுதியில் மகேஷ், அப்பெண் உட்பட மூவர் டூ - வீலரில் வந்தனர்.

அவர்களை திலகர் திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன், 41 உட்பட இரண்டு போலீசார் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக மூவரும் பதில் தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சக போலீஸ்காரரை ரயில்வே ஸ்டேஷன் அவுட் போஸ்ட்டிற்கு அனுப்பிவிட்டு முருகன் மட்டும் விசாரித்தார்.

பயந்து போன மகேஷிடம் 11 ஆயிரம் ரூபாயை பறித்தவர், அவரது ஏ.டி.எம்., கார்டு, அலைபேசியையும் பறித்து, அவரையும், நண்பரையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பினார். பின் அப்பெண்ணிடம் 'உன் நடத்தை குறித்து வீட்டில் தெரிவித்து விடுவேன்' என மிரட்டி, அப்பகுதி விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

'இவர் என் உறவினர். கொஞ்சம் 'பிரஷ்' ஆகி செல்ல வேண்டும்' எனக் கூறி விடுதியில் 'ஓசி' அறை எடுத்து, அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். இரு நாட்களாக, அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்றும் அவர் கடைக்கு வராததால், மகேஷ் சென்று விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரியவந்தது. இதற்கிடையே, இரு நாட்களாக மகேஷ் ஏ.டி.எம்., கார்டில் இருந்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது.

அதிர்ச்சியுற்ற அவர், உடனடியாக அப்பெண்ணுடன் சென்று நேற்று திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவீந்திரநாத் விசாரித்தார். பலாத்கார வழக்கில், முருகனை அனைத்து மகளிர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.பணியின்போது பெண்ணை பலாத்காரம் செய்து, போலீஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய முருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
Latest Tamil News

மாயார் ஆற்றில் மூழ்கி சுற்றுலா பயணி பலிகூடலுார்: கூடலுார் அருகே, மாயார் ஆற்றில் மூழ்கி, கேரளா சுற்றுலா பயணி இறந்தார்.

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏழு பேர், நேற்று மாலை 3:30 மணிக்கு, குளிப்பதற்காக, நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள மாயார் ஆற்றுக்கு சென்றனர். அதில், வினோத்,45, ஆற்றில் இறங்கியபோது, நீர் சுழலில் சிக்கினார்.அப்பகுதி இளைஞர்கள், தீயணைப்பு வீரர்கள் அவரை தேடினர். மாலை 5:30 மணிக்கு உடலை மீட்டனர். கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மனைவி கொலை; கணவர் கைதுசென்னை: பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர், அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கண்ணகி, 49.தம்பதி இடையே, நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ் கத்தியால் கண்ணகியின் வயிற்றில் கீறியுள்ளார். மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற கண்ணகிக்கு தையல் போடப்பட்டது. பின் வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று மாலை மரணமடைந்தார். இதையடுத்து, கண்ணகி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து, செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சிசுவை விற்ற தாய் உட்பட 4 பேர் கைதுசென்னை-பச்சிளம் சிசுவை, 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்று, பெற்ற தாயே நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. தாய், வாங்கியவர், விற்றவர், இடைத்தரகர்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடார் சமூகத்தை இழிவாக பேசிய மதபோதகர் கைதுசென்னை : நாடார் சமூகத்தை இழிவாக பேசியதாக பெண் மதபோதகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னை, குன்றத்துாரில் சில நாட்களுக்கு முன் சர்ச்சில் நடந்த கூட்டத்தில் பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுகத்தினர் குறித்து இழிவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவரை கைது செய்ய வலியுறுத்தி நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தது. இந்நிலையில் சோமங்கலத்தில் இருந்த மதபோதகர் பியூலா செல்வராணியை குன்றத்தூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரிகின்றனர்.

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (13)

 • shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி

  மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தைக்கு ஆயுள்// தந்தை பெயர் ஏன் போடவில்லை ???

 • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

  இனி மேலாவது நாடார் சமூகத்தினர் மதம் மாறுவதை நிறுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவர்கள் இந்துக்களாக எப்போதும் தொடரவேண்டும்.

 • Sai - Paris,பிரான்ஸ்

  இந்த காவலரை வேலைக்கு எடுத்ததில் நடந்த பலவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்

 • Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா

  இரவு ரோந்து செல்லும்போது கைதுப்பாக்கியை குண்டுகள் லோடு செய்து எடுத்து செல்லும்படி துறை தலைவர் அறிவுறுத்தல். நன்றாக இருக்கும்???

 • DVRR - Kolkata,இந்தியா

  உத்தர பிரதேசம் உவைஷ் அகமது, 14, துப்பாக்கி??? அப்போ ஒரு வருங்கால ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி இறந்து விட்டானா

Advertisement