Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை உஷ்ஷ்ஷ்!: தி.மு.க., - காங்., கூட்டணியில் உரசல்?

தி.மு.க., - காங்., கூட்டணியில் உரசல்?நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட தயாராகி விட்டது. அதனால் தான், கூட்டணி கட்சிகளை பற்றி கவலைப்படாமல், அக்கட்சியினரை தி.மு.க.,வில் சேர்க்க, கட்சி மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
Latest Tamil Newsகரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, சமீபத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கொண்டு வந்த, மாற்றுத்திறனாளி முகாமை நடத்தக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில், தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு எதிராக, 12 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.


'இத்திட்டத்தை நடத்த வேண்டும்; இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அவர் ஆட்சியாளர்களுக்கு, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இதனால், ஆளுங்கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.


அதேபோல, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட தலைவரின் செயல்பாடு பிடிக்காமல், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.


கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல், காங்கிரசாரை தி.மு.க.,வில் சேர்த்திருப்பதன் வாயிலாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்., கேட்கும் இடங்களை, தி.மு.க., ஒதுக்காமல் தொங்கலில் விடும் என்ற சந்தேகம் காங்கிரசாருக்கு உருவாகி விட்டதாம்.

திணறும் முதல்வர் அலுவலகம்ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர், இம்மாதம் 18ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலர் இதற்கான உத்தரவு பிறப்பித்து 12 நாட்களாகியும், நான்கு எஸ்.பி.,க்கள், புதிய பணியிடத்தில் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
Latest Tamil News

இருவர் பழைய இடத்திலேயே நீடிக்க, முதல்வர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்ற, நீண்ட பட்டியலை அரசு தயாரித்து வருகிறது.


இதில் இடம் பெற்றுள்ள, இரு ஆட்சிகளிலும் கோலோச்சும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, முக்கிய இடங்களை ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதேநேரத்தில், முக்கிய பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, சில ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முதல்வர் அலுவலகத்தை திணறடித்து வருகின்றனர்.


இதனால், 'வரும்... ஆனால் வராது...' என்பது போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்.

தலைமை செயலர் 'மிஸ்சிங்' ஏன்?முதல்வர் ஸ்டாலின், 27ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை, அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, 'நீட்' தேர்வை ரத்து செய்யும், தமிழக அரசின் சட்ட முடிவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Latest Tamil News

கவர்னர் மாளிகை தரப்பில், வெள்ளம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது ஒரு புறமிருக்க, முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன், முதல்வர் அலுவலக செயலர் உதய சந்திரன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தலைமை செயலர் இறையன்பு உடன் செல்லவில்லை.முதல்வருடன் தலைமை செயலர் செல்லாதது ஏன்; முதல்வர் தரப்பில் அவரை தவிர்த்தனரா அல்லது அவர் கவர்னர் மாளிகை செல்வதை தவிர்த்தாரா என, தலைமை செயலகத்தில் அதிகாரிகள் தரப்பில் விவாதம் நடந்து வருகிறது.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (37)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  இறையன்பு போனால் தான் எங்களுக்கு ஏதாவது சகாயம் கிடைக்கும் . இல்லையேல் கட்சி தொண்டர்கள் வற்புறுத்தலால் இன்பாவை தலைமைச்செயலரா ஆக்கிடுவோம் .

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காங்கிரஸ் காரனுக்கு மானம் ரோஷம் ஒன்னும் கிடையாது என்பது உலகெல்லாம் அறிந்த விஷயம்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  சமாதானம் செய்வது தானென?

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  சூரி தம்பி, அந்த ஐநூறு கோடி ரூவாய் மானஸ்தன் கிடைத்தானா............... தலை கூட போட்டோசூட்டில் இருப்பான் பாருங்க... இல்லைனா, ஆளு அப்பீட்........நம்ப ஆளுங்க எப்பயுமே இப்பிடித்தான் நண்பா...

 • S. Narayanan - Chennai,இந்தியா

  திமுக மற்றும் காங்கிரஸ் இருவரும் சந்தர்ப்ப வாதிகள் சுயநல சோம்பேறி வாதிகள். அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்.

Advertisement