Load Image
dinamalar telegram
Advertisement

உருமாறிய கோவிட் வைரஸ் மறுபடியுமா? வெளிநாடுகளில் பரவும் ஒமைக்ரான் : பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்: வெளிநாடுகளில் பரவும் 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் என உலகளாவிய நாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று, பின்னலாடை ரகங்கள் தயாரிக்கின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏற்படும் பேரிடர்கள், ஏற்றுமதி துறையை பாதிக்கச் செய்கிறது.ரூ.16,420 கோடிகொரோனாவின் இரண்டு அலைகளால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் இழப்பு; ஆடை உற்பத்தி முடக்கம்; தயாரித்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பமுடியாமை; அனுப்பிய ஆடைக்கான தொகையை வர்த்தகரிடமிருந்து பெறுவதில் காலதாமதம்; நிதி நெருக்கடிகளை சந்தித்தனர், ஏற்றுமதியாளர்கள்.இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், பின்னலாடை ஏற்றுமதி துறை, படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் அக்., வரையிலான ஏழுமாதங்களில், திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 16,420 கோடியை எட்டியுள்ளது.ஆர்டர் அதிகரிப்புவெளிநாடுகளிலிருந்து அதிகளவில் ஆர்டர்கள் வந்துகொண்டிருப்பதால், நிதியாண்டு மொத்த வர்த்தகம், 28 ஆயிரம் கோடியை எட்டிப்பிடிக்கும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கொரோனா அலை ஓயும் நிலையில், வெளிநாடுகளில் தற்போது, ஒமைக்ரான் வைரஸ் பரவல் துவங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட இந்த வைரஸ், ஐரோப்பாவிலும் பரவலை துவக்கியுள்ளது.தொற்று தடுப்பு நடவடிக்கையாக, உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மீண்டும் ஊரடங்கு அமலானால், வர்த்தகம் பாதிக்கப்படுமே என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:கொரோனா ஒழிந்தது என நிம்மதி அடைந்தநிலையில், தற்போது, ஒமைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. இதனால், சர்வதேச ஆடை வர்த்தக சந்தை முடங்கிவிடுமோ; ஆர்டர் இழப்பு ஏற்படுமோ என, திருப்பூர் ஏற்றுமதியாளர் மனதில், கவலைகள் சூழ்ந்துள்ளன.வைரஸ் தொற்றை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என, இந்த உலகம் கற்றுக்கொண்டுவிட்டது.

தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால், அச்சப்பட தேவையில்லை; அதேநேரம், அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது.'ஆன்லைன்' வர்த்தகம்வெளிநாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்தால், திருப்பூர் உட்பட இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்துறை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. சர்வதேச பிராண்டட் நிறுவனங்கள், ஆன்லைன் ஆடை வர்த்தகத்தில் ஈடுபடத்துவங்கிவிட்டன.எனவே, ஆடை வர்த்தகம் முழுமையாக முடங்கிவிடாது. இந்தியா உட்பட உலகளாவிய நாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்றுமதியாளர்கள், பயப்பட தேவையில்லை; வர்த்தக வாய்ப்புகளை வசப்படுத்துவதற்கான முயற்சிகளை துணிச்சலுடன் மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
* உருமாறிய கொரோனா வைரஸ்
* வெளிநாடுகளில் பரவும் 'ஒமைக்ரான்'

மீண்டும் ஊரடங்கு அமலானால், வர்த்தகம் பாதிக்கப்படுமே என, திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்தியா உட்பட உலகளாவிய நாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.ஏற்றுமதியாளர்கள், பயப்பட தேவையில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement