ADVERTISEMENT
கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி ஒரு விக்கெட்டில் நழுவியது. கடைசி கட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி 'டிரா' ஆனது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 345, நியூசிலாந்து 296 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 234 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (49 ரன்) சேர்த்து, நியூசிலாந்துக்கு 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து துவக்கத்திலேயே தடுமாறியது.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்தது. இன்றைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் அசத்தினர். லதாமை அவுட்டாக்கிய அஷ்வின் (418 விக்.,), டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். முதல் இரு இடங்களில் கும்ளே (619 விக்.,), கபில் தேவ் (434 விக்.,) உள்ளனர்.
இதனை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா 'சுழலில்' மிரட்டினார். நியூசிலாந்து சார்பில் சாமர்விலே(36), கேப்டன் வில்லியம்சன்(24) மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். மற்றவர் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்களுக்கு எடுத்து தத்தளித்தது. இந்த நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டி 'டிரா' ஆனது. கடைசி கட்டத்தில் துணிச்சலாக போராடிய ரச்சின் ரவிந்திரா 91 பந்துகளை சந்தித்து 18 ரன் எடுத்து நியூசிலாந்து அணியை மீட்டார். இந்தியா சார்பில் ஜடேஜா 4, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 345, நியூசிலாந்து 296 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 234 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை (49 ரன்) சேர்த்து, நியூசிலாந்துக்கு 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து துவக்கத்திலேயே தடுமாறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!