இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதில் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விவாதம் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்பே கூறியிருந்தோம், தற்போது அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராட்டம்:
கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக காலையில் பார்லி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக காங்., தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.பி.,க்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தொடர் துவங்கியதும் போராட்டத்தை முடித்துக்கொண்டு கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.
12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்:
ராஜ்யசபாவில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்தபோது இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து டோலா சென் (திரிணமுல் காங்.,), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா), அகிலேஷ் பிரசாத்சிங் (காங்.,), இளமாறம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூ.,), புலோ தேவி நேதம் (காங்.,), ரிபுன்போரா (காங்.,), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூ.,), ராஜாமணி படேல் (காங்.,), சாந்தா சேத்திரி (திரிணமுல் காங்.,), சையது நசீர் ஹூசைன் (காங்.,), சய்யா வர்மா (காங்.,), அனில் தேசாய் (சிவசேனா) ஆகிய 12 எம்.பி.,க்கள் ராஜ்யசபாவின் மாண்மை குலைக்கும் வகையிலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாகவும் கூறி குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குதிரை வலம் போனாலும் குற்றம் இவர்கள் சொல்படி இடம் போனாலும் குற்றம்.