காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான சசிதரூர், இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். கூட்டத்தொடருக்கு முன்னதாக 6 பெண் எம்.பி.,க்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சையானது. 'லோக்சபா, பணி செய்தற்கு அழகான இடம் இல்லை என யார் சொன்னது? இன்று காலை எனது சக எம்.பி.க்கள் ஆறு பேருடன் நான்,' எனக் குறிப்பிட்டு தமிழகத்தை சேர்ந்த காங்., எம்.பி., ஜோதிமணி, திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 6 பெண் எம்.பி.,க்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இது பல தரப்பிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கொலைகாரன் அடுத்ததை தேடுகிறான்