புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்குமாறும், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் எனவும் எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,29) துவங்கியது. கூட்டத்தொடருக்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். மிகமுக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கொரோனா குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படுவது. இவ்வாறு அவர் கூறினார்.
விவாதம் செய்ய அனுமதித்தால்தானே செய்ய முடியும்? பேசுரிமைக்காக போராடினால் அது அவ மதிப்பாகுமா?
காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம் பாஜக பின்பற்றும் ஹிந்துத்துவத்தை அவமதிப்பதால் தான். மோடியை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹிந்து அரசை ஏளனமாக கருதியதால் தான் காங்கிரஸ் மேலும் மேலும் வீழ்ச்சியடைகிறது. பார்லிமென்டில் பாஜக அரசுடன் விவாதம் செய்ய மறுத்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு திரிபுரா தேர்தலில் கூட வெற்றி கிடைக்கவில்லை. போகிறபோக்கை பார்த்தால் 2026 தேர்தலில் காங்கிரஸ் இப்போது கையில் வைத்திருக்கும் இடங்களை கூட இழக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மோடியை பகைத்துக் கொள்வது என்பது இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை பகைத்துக் கொள்வதற்கு சமம். காங்கிரஸின் எதிர்காலம் இருண்டு விடும்.
2G. விவகாரம் கூட அன்றைய ஆளும் கட்சி விவாதிக்க கூப்பிட்டது. நீங்கள் தயார் இல்லை. இப்போது வினோத் ராய் அவர்கள் 2G ஊழல் இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறார். முதலில் இதை பற்றி விவாதிக்கலாம்
எங்கே விவாதம் செய்த விட்டீங்க? வேளாண் சட்டங்களை ரத்து செய்யுறோம்னு சொல்லி ஊத்தி மூடிட்டீங்களே...
விவாதம்னா என்னான்னு ராகுலுக்கு தெரியுமா?