ADVERTISEMENT
கோவை : ''கட்டுமானத் துறையினரின் குறைகள் தீர்க்க விரைவில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.
@3br'பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா' கோவை மையம் சார்பில், கட்டுனர் தினவிழா கோவை சின்னியம்பாளையத்தில் நடந்தது.இதில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:
சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களுக்கான மூலப்பொருள் விலை உயர்வு, மின்இணைப்பு பெறுவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை, கட்டுமானத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.கட்டுனர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்கும் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் விரைவில் நடத்தப்படும். அதில் குறைகள் கேட்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும். கலந்துரையாடல் கூட்ட தேதி விரைவில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பில்டர்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் சிவக்குமார், முன்னாள் அகில இந்திய தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!