கான்ட்ராக்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழக பா.ஜ.,
சென்னை-'மழைநீர் கால்வாயில் ஊழல் புரிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என, தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:சென்னை நகரம் நரகமாகியுள்ளது; தெருக்களில் நீர் தேங்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் சரியாக அமைக்காதது மற்றும் பராமரிக்காததே காரணம்.
ஆனால், அமைத்ததாக, பராமரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக சொல்கின்றனர். தி.மு.க., அரசு கடந்த அரசை குறை சொல்கிறது. அப்போது இருந்த அதே அதிகாரிகள் தான் இப்போதும் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க., அரசு ஏன் தயங்க வேண்டும்; ஊழல் நடத்திருந்தால், அதை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால், சீர்கேட்டிற்கு காரணமான அதிகாரி கள், ஒப்பந்ததாரர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு, தி.மு.க., அரசு செயலிழந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (25)
லஞ்ச பேய் சோபனா அக்கா வுக்கு பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் பண்ணியது போல பண்ணுவானுவோ இந்த விடியா ஆட்சியாளனுவோ......
எங்க பலவருஷமா சென்னையை இவனுவோ கோட்டைன்னு சொல்லி பெரும்பான்மையான எம் எல் எ க்கள் உடன் பிறப்புகளாத்தான் பல வருசமா இருக்கானுவோ....இவனுவோ புறங்கையை நக்கிவிட்டு அடுத்தவனுவோலை மேடையில வேணுமுன்னா திட்டுவானுவோ... ஊழல் செஞ்சேன்னு சொல்லுவானுவோ....விசாரித்து முடிவு வந்தா அதுக்கு காரணமுன்னு புறங்கை நக்கின உடன்பிறப்பு தான்னு தெரிஞ்சிடுமே.... அதனால நடவடிக்கை இருக்காது.....
அதிகாரிகள் கேடுகெட்ட இந்த விடியா ஆட்சியின் செல்ல பிள்ளைகள் ஆனா ஜக்டோ- ஜியோ காரணுவோ ஆயிற்றே....அப்புறம் எப்படி நடவடிக்கை எடுபானுவோ....
வேற ஒன்னும் இல்ல தம்பி - இரு கழகங்களும் - ஐம்பது:ஐம்பது
அவனுங்க எல்லாம் நம் சொந்தமுங்க அதான் நடவடிக்கை எடுக்க தயக்கம் - இப்படிக்கு மடியல் அரசு