ADVERTISEMENT
சென்னை:'அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றக்கூடாது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மாற்றத்தை தருவோம் என்று கூறிவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த இரண்டாம் நாளே, சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப் பட்டது.சில நாட்களுக்கு முன், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க., தலைவரின் படம் திடீரென ஒட்டப்பட்டது.
தற்போது, சேலம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக்கில் பெயர் பலகையை எடுத்து விட்டு, 'முதல்வரின் மினி கிளினிக்' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.அந்த பெயர் பலகையில், தற்போதைய முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர், தி.மு.க., தலைவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இதிலிருந்தே, தி.மு.க.,வினரின் கட்டுப்பாட்டில் தான் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதும்; அரசு நடவடிக்கைகளில் தி.மு.க.,வினர் தலையிடுகின்றனர் என்பதும் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.
எனவே, முதல்வர் உடனே தலையிட்டு, பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை, அங்கே பொருத்த வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வேற வேலை இல்லயா