Load Image
dinamalar telegram
Advertisement

நலத்திட்ட உதவி வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 215 குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில், ஐந்து வகையான பாத்திரங்கள், 35 பேருக்கு காஸ் சிலிண்டர் மற்றும் ஆடைகளை பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., கோவிந்தசாமி வழங்கினார்.* அரூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ஒன்பது குடும்பங்களுக்கு காஸ் சிலிண்டர், ஸ்டவ், பாத்திரங்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை, அரூர் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார் வழங்கினார்.


* காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளியிலுள்ள இலங்கை தமிழர் முகாம் மக்களுக்கு, அரசு சார்பில் நலதிட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாலக்கோடு, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., அன்பழகன், 196 குடும்பங்களுக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement