Load Image
dinamalar telegram
Advertisement

பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசி., பெண் எம்.பி.,

Tamil News
ADVERTISEMENT
வெல்லிங்டன்: நியூசிலாந்து எம்.பி., ஜூலி அன்னே ஜெண்டர், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்துவிட்டது.
Latest Tamil News
மருத்துவமனைக்கு செல்வதற்காக அதிகாலை 2:00 மணிக்கு எழுந்த போது, என் பிரசவ வலி அவ்வளவு மோசமாக இல்லை. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 2 - 3 நிமிடங்கள் ஆகும். இருந்த போதும், அங்கு சென்ற 10 நிமிடங்களில் பிரசவ வலி அதிகரித்தது. இப்போது, எங்களிடம் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்து உள்ளது என தெரிவித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Latest Tamil News
அமெரிக்காவின் மின்னிசோட்டாவில் பிறந்த ஜூலி அன்னேஜெண்டர், கடந்த 2006ம் ஆண்டு நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், பல பணிவான அரசியல்வாதிகள் உள்ளனர். அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா ஆண்டர்சன், பதவியில் இருக்கும்போது, மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வரும் போது , தனது 3 மாத கைக்குழந்தையுடன் வந்தார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

  • DVRR - Kolkata,இந்தியா

    Very Very Great குழந்தாய் எவ்வளவு தைரியம் இந்த பெண்ணுக்கு இந்த அளவுக்கு தைரியம் நமது பெண்களுக்கும் வரவேண்டும்

  • vbs manian - hyderabad,இந்தியா

    இதே நம் நாட்டில் நடந்தால் மருத்துவ மனை எம் பி வீட்டுக்கு வரும்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    இந்தியாவில் இதை நினைத்து பார்க்க முடியாது. பதவி கர்வம் தலைக்கேறவில்லை. நிதானமாய் இருக்கிறார்கள். பந்தா காட்டும் தலைகள் என்ன சொல்லும்.

  • SANKAR - ,

    if this is the actual image ...then she travelled by MOTOR cycle!

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    அம்மா, இந்த எளிமை, எங்கள் நாட்டு அரசியவாதிகளுக்கு ஒரு போதும் வராது. ஒரு லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, சிறை சென்று, அதற்கு நீதிமன்ற ஜாமீன் வாங்கியதற்கு விமான நிலையத்தில், மேள தாளம், கரகாட்டம் முழங்க வரவேற்பு தரப்பட்டது. எங்கள் நாட்டில் ஒரு தலைவரை ஏழு அடைமொழிகள் போட்டு அழைத்தால் தான் அவர் மகிழ்வார். அவருடைய சொந்தப்பெயரைச்சொன்னால் அவருக்கு கடும் கோபம் வரும்....

Advertisement