Load Image
dinamalar telegram
Advertisement

குழந்தைகளை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுங்க! அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை-''குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தினார்.

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ, தமிழக அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி உள்ளது. இழப்பீடுகளை துரிதமாக வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க வசதியாக, தடயவியல் ஆய்வகங்கள் எண்ணிக்கை மற்றும் இதர உள்கட்டமைப்புகளை கூடுதலாக அமைக்க வேண்டும்.பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, முன்னுரிமை வழங்கி, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதுடன், வழக்குகளை விரைவாக முடித்து, குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதை உறுதி செய்ய வேண்டும்.சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், தொடர் கண்காணிப்பு, சட்ட உதவி போன்றவற்றை முற்றிலும், குழந்தை நேய சூழலில் வழங்கிட வேண்டும்.

இனி வரும் காலங்களில், இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க, பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில், தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement