பா.ம.க.,வில் நாளை முதல் விருப்ப மனு
சென்னை-நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட விரும்புவோர், நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், நாளை முதல் டிசம்பர், 3 வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட செயலர்களிடம் விருப்ப மனு அளிக்கலாம். விண்ணப்பதாரர்களிடம் உயர்நிலை குழு நேர்காணல் நடத்தி, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!