ஒமேக்ரான் வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள டில்லி அரசு தீவிர நடவடிக்கை
டில்லி: தென்னாப்ரிக்காவில் இருந்து பரவி வரும் 'ஒமேக்ரான்' வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள டில்லி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கொரோனா ரகமான 'ஒமேக்ரான்' தற்போது இந்தியாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து முக்கிய விமான நிலையங்களில் ஆப்பிரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து ஓமேக்ரோன் பரவ அதிக வாய்ப்புள்ளதால் டில்லி சுகாதாரத்துறை தற்போதே விழித்துக் கொண்டுள்ளது.
லெப்டினன்ட் கவர்னர் அணில் பைஜால் கமிஷனர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகிறார். பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களை தற்காத்துக்கொள்வதில் மும்முரம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
டில்லி பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் விரைவில் முக்கிய கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளனர். இந்த கூட்டத்தில் வைராலஜிஸ்டுகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவின் இரண்டு அலைகளையும் டில்லி அரசு சிறப்பாகக் கையாண்டு உள்ளதாகவும் தற்போது ஒமேக்ரான் டில்லிக்குள் நுழையாமல் தற்காக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்து (7)
ஆமாம்... ஆமாம்.... ஆம் ஆத்மிகளிடம் இந்த வகை வைரசை பிடிக்க சிறப்பான வலை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனியாக ஏப்போர்ட் சென்று உனலே பிடித்து அழித்துவிடுவார்கள்.
நேத்திக்கி பிரதமர் கலந்துரையாடினாரே... இவரை ஆட்டத்துக்கு சேத்துக்கிட்டாரா?
முதலில் சுற்றுப்புற மாசு டெல்லி மக்களை தாக்காமல் காக்கவும் -முழு பக்க விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்தவும் .
ஓ-மைக்ரான் . . . எங்கே சரியா சொல்லுங்க . . . அது ஓ - மைக்ரான்
கொரோன குறைஞ்சு வருது என்று செய்தி ஒருபக்கம் மாற்று உருவில் வருகை இன்று செய்தி இநோருபக்கம் மொத்தத்தில் கொரோன அழியவில்லை அதன் ஆட்டம் தொடடுகின்றது டன்ன செய்ய காத்து இருக்கு அரசு எல்லாத்துக்கும் வரி போவது போல இனி கொரோன நொய்யலிக்கும் வரி போட்டால் நல்ல வருமானம் வரும் அதையும் இந்த அரசிஸிடம் எதிர்பார்க்கலாம் .