Load Image
dinamalar telegram
Advertisement

அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம்; அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

மேட்டூர்:சேலம், நவப்பட்டி ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' பெயரை மாற்றி தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Latest Tamil News
தமிழகம் முழுதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அ.தி.மு.க., அரசு சார்பில், 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களான நிலையில், நான்கு நாட்களுக்கு முன், நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. அப்பகுதி தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'முதலமைச்சர் மினி கிளினிக்' என பெயர் பலகை வைத்துள்ளனர். இது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.Latest Tamil News
கொளத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமலா கூறுகையில், ''அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது குறித்து சுகாதாரத் துறைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

நவப்பட்டி ஊராட்சி தலைவர் காளியம்மாள் கூறியதாவது:அ ம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றம் செய்து, ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்காக, ஊராட்சியில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இது குறித்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், மதுரையில் ஓர் உணவகத்தில் கருணாநிதி படமும் வைக்கப் பட்டது. இது சர்ச்சையானதும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவர் படங்களுமே நீக்கப்பட்டன.

இந்நிலையில், சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன், முதலமைச்சர் கிளினிக் என எழுதப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (38)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஸ்டாலின் ஆடுறது 'கண்ணாமூச்சி ஆட்டம் சீக்கிரமே மக்கள் அவுட் செஞ்சுருவாங்க

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இப்படியெல்லாம் பெயர் மாற்றுவது அவசியம் இதன் மூலம் வெள்ளம் வடிந்துவிடும் மக்கள் துயர் நீங்கும்

 • Rajaguruprasath - Atlanta,யூ.எஸ்.ஏ

  அது அம்மா கிளினிக், அய்யா கிளினிக் இல்ல . அரசு பொது மருத்துவமனை.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  எதற்கு இந்த பெயர் மாற்றம் எல்லாம் சம்பாதிக்க தான் மக்கள் நலனாவது மன்னாங்கட்டியவது. எல்லாம் அவர்கள் விடியலுக்கு தான்

 • Samathuvan - chennai,இந்தியா

  ஒன்லி பெயர் மாற்றி போர்டு மாட்டுனதுல மட்டும்தான் நம்மள போல மானம்கெட்ட மக்கள் பொங்க வேண்டுமா, அது ஒழுங்கா செயல் படுதான்னு முதல்ல யோசிக்கணும். வெறும் முதலுதவி பெட்டியை வைச்சுட்டு உள்ளே சமாச்சாரம் இல்லேன்னா அது இருந்து என்ன பண்ண போவுது அதுபோலதான். ஒரு சென்சஸ் எடுத்து பார்த்து இது வரை இங்க என்ன ட்ரீட்மென்ட் பண்ணுனாங்க, இந்த கிளினிக்குல எல்லா ஆளுகளும் நாள் தவறாம வந்தார்களா என்பதையும். இல்லேன்னா இதை இழுத்து மூடலாம். ஏற்கெனவே இந்த அரசு ஹாஸ்பிடல்ல வேலை செய்யுற டாக்டர்ஸ் எல்லாம் சொந்த கிளினிக்ல மட்டும்தான் முழுமையா வேலை செய்யுறாங்க, பார்ட் டைம்மாதான் பேருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் அட்டெண்டென்ஸ் போடா மட்டும்தான் போராங்க. இது எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலையாகவே தெரிகிறது.டெய்லி டாஸ்க் மார்க் போறவனுக்கு அவனால டாக்டர் கிட்ட போகமுடியாதா? யோசிக்கவேண்டிய விஷயம் ஏனென்றால் இதுலேயும் நம்ம வரிப்பணம் இருக்கு.

Advertisement