அவ்வையார்குப்பத்தில் கிராம சபைக் கூட்டம்
மயிலம்-மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மதிப்பீடு தொடர்பான கிராம சபைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் மகாலட்சுமி கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர் சுரேஷ் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!