Load Image
dinamalar telegram
Advertisement

எளிய முறையில் களை பறிக்க கருவி தயார்!

Tamil News
ADVERTISEMENT
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த சுசீந்தர்: வயல்ல சரியான சமயத்துல களை எடுக்கணும். ஆனா அந்த நேரத்துல ஆளை தேடி அலையிறதே பெரும் வேலையா இருக்கு. அதனால வேலை செய்ய முடியாம, மகசூல் இழப்பு வரைக்கும் போயிடுது. இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு தான், வீட்டுல கிடைக்குற மரக்கட்டை, கட்டுக் கம்பி மட்டும் வச்சு, களை பறிக்கும் கருவியை செய்தேன்.கையில் பிடிக்கும் அளவுக்கு 7 அடி நீள கம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 6 அடி நீளத்தில் மற்றொரு கம்பை எடுத்து, இரண்டையும், ஆங்கில, 'டி' எழுத்து வடிவில் இணைத்து, உறுதித்தன்மைக்காக, 'வி' வடிவ சட்டம் கொண்டு இரண்டு கம்புகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பின், 3 அடி நீளத்தில் மூன்று கட்டுக் கம்பிகளை எடுத்து, 6 அடி நீளம் கொண்ட கம்பின் மீது வைத்து இரண்டாக மடித்து இறுக்கமாக முறுக்கி விட வேண்டும். முனைப்பகுதியை மட்டும் சற்று படர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இப்படி தேவையான அளவு கம்பிகளை அந்த கம்பு முழுதும் வைத்தால் போதும். அதுவே இறுதியான வடிவம். அதைக் கொண்டு நாற்று நடவு செய்த வயலில் வைத்து, களை பறிக்கலாம்.இதை இழுக்க ஒரு ஆள் போதும். ரொம்ப சுலபமான வேலை. இந்த கருவியை வைச்சு ஒரு ஆள் ஒரு நாளைக்கு, 2 ஏக்கர் வரை களை எடுக்கலாம். வேலையாளுங்கள நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை. 1 ஏக்கருக்கு ஒருமுறை களையெடுக்க, 2,500 ரூபாய் வரை கூலி செலவாகும். அந்த செலவை இந்த கருவி மிச்சப்படுத்துது. கட்டுக்கம்பிங்க வாங்க, 50 ரூபாய் இருந்தா போதும். வீட்டுல கிடைக்குற பொருட்களை வச்சு, இதை நாமளே தயார் செய்துடலாம். இரும்புக் குழாய்ல வெல்டிங் வச்சும் இதை தயார் செஞ்சும் பயன்படுத்தலாம். பாலிதீன் குழாயில இந்த கருவியை செய்யும் போது, குழாயை சேமிப்பு கலனாக மாத்தி, அதுல இடுபொருளை நிரப்பி நேரடியாக அதை பயிருக்கு கொடுக்க முடியும். சீனா மாதிரியான நாடுகள்ல சங்கிலியை பயன்படுத்தி, இது மாதிரியான கருவியை செஞ்சு உபயோகிக்கிறாங்க. ஆனா அது மாதிரி நாம செய்றதுக்கு அதிக செலவாகும். அதனால, சுலபமான முறையில இதை செய்திருக்கேன்.வயலில் தண்ணி நிற்கும் போது தான், இந்த கருவி மூலம் களை எடுக்க முடியும். களை எடுக்க பயன்படு வதோடு மட்டுமல்லாமல், இலை சுருட்டுப்புழு பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கும். மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் போது இதில் உள்ள கம்பிகள், 1 அங்குல ஆழத்துல தரையை கீறிட்டு போகும். அதனால களைகள் வேரோட வந்துடும். விளைச்சலுக்கு காற்றோட்டமான சூழ்நிலை உருவாகும். அதோட நுண்ணுாட்ட சத்துக்கள் மறுபடியும் கிளறிவிடும். இக்கருவியால் பயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை!தொடர்புக்கு: 99526 37722
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • spr - chennai,இந்தியா

    பாராட்டுவோம் வாழ்க்கைக்குத் தேவையான இது போன்ற எளிய கருவிகளைக் கண்டுபிடிக்க இயல்பான அறிவு போதும் பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. ஆனால் வேலை வாய்ப்பில்லை வருமானம் இல்லை என்றெல்லாம் மக்கள் புலம்புகையில் , வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பது உண்மையில்லை நாளுக்குநாள் நகரங்களில் குவியும் மக்கள் தொகை பலவகையிலும் மானியம் சலுகை என அரசு கொடுக்கும் பணம் கறுப்புப் பண நடமாட்டம் கைபேசிக்கான வியாபாரம் பண்டிகைக் காலங்களில் நடக்கும் வியாபாரம் இவையெல்லாம் மக்கள் கையில் பண நடமாட்டத்தைக் குறிக்கிறது அதனால் மக்களுக்கு இது போன்ற வேலை செய்ய விருப்பமில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது

  • Arasu - OOty,இந்தியா

    வாழ்த்துக்கள்

  • Balasubramanian Sundaram - NewYork,யூ.எஸ்.ஏ

    சுசீந்தருக்கு நேஷனல் அவார்டு கொடுக்கவேண்டும் தினமலர் பரிந்துரை செய்யலாம் மத்திய அரசிற்கு

Advertisement