Load Image
dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Tamil News
ADVERTISEMENT
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: பா.ஜ., சார்பில் நான்கு நகரங்களில் சொந்த கட்டடம் கட்டப்பட்டதற்கு, காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். ஐயா, ஆயிரம் ஓட்டை கப்பல், உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்கள் நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்த்துகளுக்கு நன்றி.


'டவுட்' தனபாலு: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை கையில் இப்போது கைத்துப்பாக்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாயில் இயந்திர துப்பாக்கி வைத்துள்ளார். அவரின் அதிரடியில் தி.மு.க., அமைச்சர்கள், மேலிடம், அவர்கள் நடத்தி வரும், 'டிவி' 'பட் படார்!' இப்போது சிதம்பரம் சிக்கியுள்ளார். சிதம்பரம் நிலைமையில் யாருக்கும், 'டவுட்' வரக் கூடாது என நினைத்து, போட்டு தாக்கி விட்டார்!


தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி
: தமிழகம் முழுதும், 650 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் செயல்படுகின்றன. கூடுதலாக, 500 சமுதாய உணவகங்களை, 'கலைஞர்' உணவகம் என்ற பெயரில் அமைக்க உள்ளோம். இந்த திட்டத்தை தடையின்றி தொடர வேண்டுமெனில் மத்திய அரசின் ஆதரவும் தேவை.


'டவுட்' தனபாலு: தமிழக அரசின் இந்த முடிவால், 'அம்மா' உணவகங்கள் காலப் போக்கில் காணாமல் போய்விடும் என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், அம்மா உணவகம் பக்கத்திலேயே கலைஞர் உணவகத்தை திறப்பீர்கள் அல்லது அம்மா உணவகத்திற்கு நிதி, பணியாளர்களை குறைப்பீர்கள்... தானாக அந்த உணவகம் மறைந்து விடும். இது தான் தமிழக அரசின் செயல் திட்டம் என்பதை மக்கள் முன்னரே அறிவர்!


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 100 நாள் வேலை திட்டம் அறிமுகமாகி, 2006ல் ஒரு நாள் ஊதியம், 65 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது; இப்போது, 148 ரூபாய் வழங்கப்படுகிறது. மத்திய அமைச்சகத்தின் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ள, ஒரு நாள் ஊதியமான, 383 ரூபாய் வழங்க, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.



'டவுட்' தனபாலு: நுாறு நாள் வேலை திட்டத்தில் ஏழை மக்கள் தான் அதிகமாக பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், நுாறு நாள் பணியாளர்களுக்கு இப்போது கிடைக்கும் சம்பளமே போதும் என இருந்து விடுகின்றனர்; வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இன்னும் சம்பளம் கூடினால் என்னவாகுமோ என்ற, 'டவுட்' வலுக்கிறது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அம்மாவும் சரி, கலைஞரும் சரி, யாருமே அவர்கள் கைக்காசையோ, கட்சி நிதியையோ போட்டு உணவகம் திறக்கவில்லை பிறகு ஆட்சிமாற்றங்களில் பெயர் மாற்றுவானேன் ? 'அரசு உணவகம்' என்று பெயரிட்டால்தானே பொருந்தும்

 • ravi - chennai,இந்தியா

  திமுக அல்லக்கைகள் மோடியின் பேச்சை கொச்சைப்படுத்துகிறார்கள். மோடி பல அரசியல் கட்சிகள் குடும்பக்கட்சிகளாக இயங்குகின்றன. அவர்களுக்கு நாட்டுமக்களின்மீது அக்கறையில்லை. தங்களின் குடும்ப வளர்ச்சிக்காகத்தான் கட்சிகளை வியாபாரமாய் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் என்ன தவறு. முதல்வரை வேறு குடும்பத்தில் தேர்ந்து எடுக்கமுடியாத எதேச்சதிகார ஆட்சியை குடும்ப ஆட்சி என்று சொல்லாமல் எப்படி ஜனநாயக ஆட்சி என்று சொல்லமுடியும். திமுக, கான்-கிராஸ், லல்லு RJD, கர்நாடக கவுடா ஜனதா தளம், சமாஜவாதி எல்லாமே குடும்ப கட்சிகள் தானே. இதில் 100க்கு 100 உண்மை இருக்கிறது.

 • Prem -

  .காப்பாற்று..

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வசதியானவர்களும் சேர்க்கப்பட்டு கூலியை ஆளுக்கு பாதியாக பிரித்து கொள்கின்றனர் அவர்கள் வேலைக்கும் வருவதில்லை .முறையாக விசாரணை நடத்தினால் 25 சதவிகிதம் பேர் தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிப்படும் மேலும் இத்திட்டத்தினால் விவசாய பணிகள் பாதிக்க பட்டுள்ளன .தோண்டிய இடத்தையே மீண்டும் மீண்டும் தோண்டி கொண்டு உள்ளனர்

Advertisement